நடிகர் மன்சூர் அலிகான் 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் இருப்பவர். இதுவரை 360க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். இதில் சில படங்களை அவரே தயாரித்தும் இருக்கிறார். இப்போதும் விரைவில் அவரது தயாரிப்பில், சரக்கு என்ற படம் ரிலீஸ் ஆக இருக்கிறது.
இந்நிலையில், லியோ படத்தில் மன்சூர் அலிகான், விஜயின் நண்பர் கேரக்டரில் நடித்திருந்தார். லியோ தாஸ் என்ற கேரக்டரில் நடித்த விஜய் குறித்து, மன்சூர் அலிகான் சொல்லும் பிளாஸ்பேக் தான் இடைவேளைக்கு பிறகான கதையாக இருக்கிறது. இந்த பிளாஸ்பேக் உண்மையா, இல்லையா என்பதில் கூட ஒரு பஞ்சாயத்து ஓடிக்கொண்டு இருக்கிறது.
லியோ படத்தில், நடிகை திரிஷா விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். ஆனால், மன்சூர் அலிகானுடன் திரிஷா இணைந்து நடித்த காட்சிகள் படத்தில் இல்லை. இதுபற்றி ஒரு பேட்டியில் சொன்ன மன்சூர் அலிகான், திரிஷாவுடன் பெட்ரூம் சீன் இருக்கும் என நினைத்தேன். காஷ்மீரில் திரிஷாவை கண்ணிலேே காட்டவில்லை என்று கூறியிருந்தார்.
இதுகுறித்து திரிஷா மிக ஆவேசமாக பதில் அளித்து கண்டனம் தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்புராஜ், தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கம், நடிகை குஷ்பு உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இன்னும் சிலர் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் அந்த லியோ படத்தில் நiடித்த ஹீரோ, திரிஷாவின் நீண்டகால நண்பருமான விஜய் இந்த விவகாரம் குறித்து இன்னும் எந்தவிதமாக கருத்தோ, கண்டனமோ தெரிவிக்காமல் மவுனமாக இருக்கிறார். இதில் அரசியலுக்கு வரும் திட்டத்தில் உள்ள அவர், தான் சார்ந்துள்ள சினிமா துறையில் ஒரு நடிகைக்கு ஏற்பட்ட பிரச்னையில் எந்தவிதமான ரியாக்ஷனும் காட்டாமல் இருப்பது, பலருக்கும் பலத்த அதிர்ச்சியை தந்துள்ளது.





