- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் படத்துல நடந்த தப்பு ரஜினி படத்துல நடந்துடக் கூடாது, வேற லெவலில் யோசிச்ச லோகேஷ்...

விஜய் படத்துல நடந்த தப்பு ரஜினி படத்துல நடந்துடக் கூடாது, வேற லெவலில் யோசிச்ச லோகேஷ் கனகராஜ் – கண்டிப்பா இந்த முறை குறி தப்பாது ப்ரோ

- Advertisement -

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த அக்டோபர் 19ம் தேதி வெளியான படம் லியோ. இந்த படம் வசூல் ரீதியாக பெரிய வெற்றி பெற்றாலும், விமர்சன ரீதியாக தோல்வி படமாக தான் பார்க்கப்படுகிறது. குறிப்பாக இடைவேளைக்கு பிறகு லியோ படம், மிக மோசமாக விமர்சிக்கப்பட்டது.

அதுமட்டுமின்றி லியோ படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது. அதில் விஜய் பேசிய அந்த கெட்ட வார்த்தை குறித்து கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அரசியலுக்கு வரும் முனைப்பில் இருக்கும் விஜய் இதுபோன்ற ஒரு வார்த்தையை பேசலாமா என்றும் பலரும் திட்டித் தீர்த்தனர். ஒரு கட்டத்தில் நான்தான் விஜயை பேசச் சொன்னேன் என அந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

- Advertisement -

லியோ படத்தை விஜய் ரசிகர்கள் கொண்டாடினாலும் பொதுவான ரசிகர்கள் இந்த படத்தை பார்த்து முழுமையாக திருப்தியடையவில்லை. இது படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜூக்கும் ஒருகட்டத்தில் தெரிய வந்தது. ஏனெனில், தனது போன படத்தை விட, இந்த படம் ரசிகர்களுக்கு எந்த அளவுக்கு பிடித்திருக்கிறது, தனது இயக்குநர் தரம் உயர்ந்திருக்கிறதா என அறிய விரும்புபவர் அவர்.

இதையடுத்து அடுத்து தான் இயக்க உள்ள ரஜினி படம், இதுபோன்ற எந்த விமர்சனத்திலும் சிக்கி விடக்கூடாது. லியோ படத்தை போல, ரசிகர்களை ஏமாற்றி விடக்கூடாது என்பதில் மிக கவனமாக இருக்கிறார். அதற்காக அவர் செய்த ஒரு விஷயம்தான் இப்போது ஹைலைட்டாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

அதாவது ரஜினி 171 படத்தின் கதையை தனக்கு மிகவும் வேண்டப்பட்ட, தனது நலம் விரும்பிகளாக உள்ள கவுதம் மேனன், வெங்கட்பிரபு, மிஷ்கின் போன்ற எட்டு இயக்குநர்களிடம் சொல்லி இருக்கிறார். நம்பகமாக அவர்களிடம் கதையை சொல்லி அவர்களது கருத்துகளை கேட்டிருக்கிறார்.

அதன்பிறகே ரஜினி படத்தின் கதை வசனத்தை எழுத துவங்கி இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். கடந்த முறை தனது நண்பர் என இயக்குநர் ரத்னக்குமாரிடம் டிஸ்கசன் செய்து இயக்கியதால்தான், லியோ படம் சொதப்பியது. இந்தமுறை அதுபோன்ற தவறுகளுக்கு வாய்ப்பளிக்காமல் ரஜினி படத்தை மாஸ் ஹிட் ஆக்க திட்டமிட்டுள்ளார் லோகேஷ் கனகராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்