நடிகை திரிஷா குறித்து தவறாக பேசியதாக, நடிகர் மன்சூர் அலிகான் மீது சென்னை நுங்கம்பாக்கம் அனைத்து மகளிர் போலீசில் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மன்சூர் அலிகான் நேரில் விசாரணைக்கு ஆஜராக போலீஸ் தரப்பில் இருந்து தகவல் அனுப்பியதாகவும் தெரிய வந்துள்ளது.
ஆனால், பிக்பாஸ் வீட்டில் உள்ள சீனியர் நடிகைகளில் ஒருவரான விசித்ரா கூறியுள்ள பல விஷயங்களை கேட்டால், திரிஷா, மன்சூர் அலிகான் பிரச்னை எல்லாம் ஒன்றுமே இல்லை என்பதுபோல் பலருக்கும் தோன்றுகிறது. ஏனெனில் ஒரு நடிகையாக பல சீண்டல்களை கடந்து வந்திருக்கிறார் விசித்ரா.
பிக்பாஸ் வீட்டுக்குள் பூகம்பம் டாஸ்க் என்ற புதிய போட்டி அறிவிக்கப்பட்டது. இதில் தங்களது வாழ்வில் நடந்த பூகம்பம் போன்ற பிரச்னைகளை, விஷயங்களை இந்த டாஸ்க்கில் சொல்ல வேண்டும் என்பதுதான் விதிமுறை. இதில், நான் சினிமாவை விட்டு ஏன் விலகினேன் என்பதற்கான காரணங்களை முன்னாள் நடிகையான விசித்ரா கூறியிருக்கிறார்.
ஒரு பிரபல ஹீரோ நடிக்கும் படம், கேரளாவில் ஷூட்டிங் நடந்தது. அதில் நானும் நடிக்க ஷூட்டிங் போயிருந்தேன். அந்த ஹீரோ என்னை ரூமுக்கு வருமாறு அழைத்தார். நான் கண்டுகொள்ளவில்லை. பிறகு இரவில் என் அறைக்கதவை நான்கைந்து பேர் கொண்ட கும்பல் தட்டி என்னை பயமுறுத்தினர். இப்படி பல தொல்லைகள் அந்த ஹீரோ கொடுத்தார்.
இதே போல் ஒரு படத்தில், ஒரு முக்கிய காட்சி படமாக்கப்பட்ட போது, வேண்டுமென்றே சிலர், என் உடம்பில் சில இடங்களை தொட்டனர். இதுகுறித்து நான் அந்த படத்தின் இயக்குநரிடம் புகார் தெரிவித்தேன். ஆனால், அந்த இயக்குநர் அப்படி நடந்துக்கொண்டவர்களை கண்டிக்காமல், பல பேர் முன்னிலையில் என்னை ஓங்கி அறைந்தார். மற்றவர்கள் முன் அசிங்கமாக என்னை திட்டினார்.
இந்த சம்பவம் குறித்து, நடிகர் சங்கத்தில் புகார் அளித்தேன். என் கைபட புகார் கடிதமும் எழுதிக்கொடுத்தேன். அந்த படத்தில் நடிக்க வேண்டாம், திரும்பி வந்துவிடுங்கள் என்று கூறினர். அப்போது சங்க தலைவராக இருந்தவரும், இதையெல்லாம் கண்டுக்காமல் வேலையை மட்டும் பாரும்மா, என்று கூறியிருக்கிறார். இதனால் மனம் வெறுத்துப் போனதால்தான், சினிமாவை விட்டே ஒதுங்கி விட்டேன் என்று கூறியிருக்கிறார். ஒருவேளை, விசித்ரா இப்போது வெளியே இருந்திருந்தால் திரிஷா மன்சூர் அலிகான் விவகாரம் எல்லாம், ஒரு விஷயமே இல்லை என்று அலட்சியமாக கூறியிருப்பார் விசித்ரா.





