- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்த ஜானர்ல ஏற்கனவே நிறைய சப்ஜெக்ட் வந்துடுச்சே ப்ரோ, இதையா எடுக்கறீங்க? விஜய் 68...

இந்த ஜானர்ல ஏற்கனவே நிறைய சப்ஜெக்ட் வந்துடுச்சே ப்ரோ, இதையா எடுக்கறீங்க? விஜய் 68 படத்தோட கதை இதுதானாம் – அட போங்கப்பா

- Advertisement -

நடிகர் விஜய் நடிப்பில், இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கத்தில் இரண்டு மாதங்களாக விஜய் 68 படத்தின் படப்பிடிப்பு வெகுவேகமாக நடந்து வருகிறது. சென்னை, தாய்லாந்து, பாங்காங் என, இப்போது மீண்டும் சென்னையில் நடந்து வருகிறது. லியோ படத்துக்கு பிறகு, இந்த படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், வெங்கட்பிரபு இயக்கும் விஜய் படத்தின் கதை இதுதான் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது குடும்ப கதை, ஆக்‌ஷன் மற்றும் திரில்லர் கதை என பல்வேறு தகவல்கள் வெளியாகி கொண்டிருந்த நிலையில், இப்போது இந்த படத்தின் இதுதான் என உறுதியாக தெரிய வந்துள்ளது. இந்த கதைதானா என, ரசிகர்களுக்கு அலுப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

இயக்குநர் ரவிக்குமார் இயக்கிய படம் இன்று நேற்று நாளை. விஷ்ணு விஷால், கருணாகரன் நடித்த இந்த படம் டைம் டிராவல் சப்ஜெக்டை கொண்டிருந்தது. டைம் டிராவல் மெஷினில் ஏறினால், குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு பின்னால் செல்ல முடியும். இந்த படம் பெரிய அளவில் பேசப்பட்டது.

அதே போல், சூர்யா நடித்த படம் 24 . இந்த படமும் டைம் டிராவல் சப்ஜெக்டை கொண்டதுதான். இதில் கையில் உள்ள வாட்சில் ஆண்டை, நேரத்தை மாற்றினால் அந்த காலகட்டத்துக்கு சென்றுவிட முடியும். இந்த படமும் ரசிகர்களிடம் ஓரளவு வரவேற்பை பெற்றது. சமீபத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளிவந்த மார்க் ஆண்டனி படமும், டைம் டிராவல் சப்ஜெக்ட் கதைதான். அதுமட்டுமல்ல, வெங்கட்பிரபு இயக்கிய மாநாடு படமும் இதே டைம் டிராவல் சப்ஜெக்ட்தான்.

- Advertisement -

இப்போது விஜய் நடித்துக்கொண்டு இருக்கும் விஜய் 68 படமும் இதே டைம் டிராவல் கதைதான். அப்பா, மகன் என இரண்டு கேரக்டர்களில் நடிக்கும் விஜய், அப்பாவின் வாழ்வில் நடந்த விஷயங்களை டைம் டிராவல் மூலம் மகன் விஜய் தெரிந்துக்கொள்வாராம். அதில் நடக்கும் பிரச்னைகளை மையமாக கொண்டதுதான் இந்த படம் என்றும் தெரிய வந்துள்ளது.

ஏற்கனவே மாநாடு, இன்று நேற்று நாளை, மார்க் ஆண்டனி, 24 என டைம் டிராவல் சப்ஜெக்ட் படங்கள் வந்துள்ள நிலையில், ஏன் வெங்கட்பிரபுவே அந்த ஜானரில் ஒரு படம் எடுத்த நிலையில், மீண்டும் விஜய் அதே கதையில் நடிப்பது அவசியம்தானா, வேறு கதையே இல்லையா என விஜய் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்