- Advertisement -
Homeபொழுதுபோக்குமீண்டும் குட்டிக்கதை சொல்ல வரப் போகிறாரா ரஜினி? ஆடியோ லாஞ்சுக்கு தயாரான ஐஸ்வர்யா ரஜினிகாந்த்...

மீண்டும் குட்டிக்கதை சொல்ல வரப் போகிறாரா ரஜினி? ஆடியோ லாஞ்சுக்கு தயாரான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் – இந்த பிளான் ஒர்க் அவுட் ஆகுமா?

- Advertisement -

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய படம் லால் சலாம். கிரிக்கெட்டை மையப்படுத்திய இந்த படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்த படத்தில் கேமியோ ரோலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கிறார். விளையாட்டுல எதுக்கு மதத்தை கலக்கறீங்க என அவரது டயலாக்குடன் சமீபத்தில் வந்த லால் சலாம் டீசர் டிரண்டிங் ஆனது.

இப்போது பல கோடி ரூபாய் செலவில் எடுக்கப்படும் படங்களுக்கு பிரமோ மிகவும் அவசியமாகிறது. இசை வெளியீட்டு விழா, பர்ஸ்ட் லுக் போஸ்டர், சிங்கிள் பாடல் என படம் குறித்த பிரமோ நிகழ்ச்சிகளால் படத்துக்கு விளம்பரம் தேடுவது மிக முக்கியமாக இருக்கிறது.

- Advertisement -

அதற்காக தான் லியோ படம் இசை வெளியீட்டு விழா நடத்த பகீரத முயற்சி எடுக்கப்பட்டது. ஜெயிலர், பொன்னியின் செல்வன் போன்ற பெரிய பட ங்களின் இசை வெளியீட்டு விழா நடத்தப்பட்டது. இது, படத்துக்கு மிகப்பெரிய விளம்பரமாக அமைகிறது. அதிலும் சிறப்பு விருந்தினர்களாக அந்த படத்திலேயே நடித்த கலைஞர்களும் இதில் பங்கேற்பது ஹைலைட்டாக அமைகிறது.

ரஜினிகாந்த் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், லால் சலாம் படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகிறது. முதலில் ஜனவரி 26 என கூறப்பட்ட நிலையில், பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் செய்ய படத்தை வெளியிடும் ரெட் ஜெயின்ட் மூவிஸ் ஒப்புதல் தந்துள்ளது.

- Advertisement -

பொங்கல் பண்டிகைக்கு தனுஷ் நடித்த கேப்டன் மில்லன், சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4, லால் சலாம் என மூன்று படங்கள் வெளியாவது உறுதியாகி விட்டது. சிவகார்த்திகேயன் நடித்த அயலான் பொங்கலுக்கு வர வாய்ப்பில்லை எனத் தெரிகிறது. அதனால் மற்ற படங்களை விட லால் சலாம் படத்துக்கு அதிக கவனத்தை ஈர்க்க ஐஸ்வர்யா பிளான் செய்துள்ளார். அதுவும் தனுஷ் படத்துடன் மோதுகிறது லால் சலாம் என்பதும் கவனிக்கத்தக்கது.

இதையடுத்து வரும் டிசம்பர் 20ம் தேதி, லால் சலாம் படத்தின் ஆடியோ லான்ச் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மிக வேகமாக நடந்து வருகிறது. நேரு இன்டோர் ஸ்டேடியத்தில் இந்த விழா வழக்கம்போல நடத்தப்பட உள்ளது. இதில் நிச்சயமாக ரஜினி பங்கேற்கிறார். ஏனெனில் இந்த படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனம்தான், ரஜினி தற்போது தசெ ஞானவேல் இயக்கத்தில் நடித்துவரும் ரஜினி 170 படத்தின் தயாரிக்கிறது என்பதும் கவனிக்கத்தக்கது. தன் மகளுக்காகவும், தன் படத்தை தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனத்துக்காகவும் நிச்சயமாக கலந்துகொள்வார் என்பதில் சந்தேகமில்லை. நிச்சயம் விழாவில், குட்டிக்கதை சொல்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்