- Advertisement -
Homeபொழுதுபோக்குமன்சூர் அலிகான் - திரிஷா விவகாரத்தில் குளிர் காய்ந்ததா நடிகர் சங்கம்?, போனை தவிர்த்த நாசர்,...

மன்சூர் அலிகான் – திரிஷா விவகாரத்தில் குளிர் காய்ந்ததா நடிகர் சங்கம்?, போனை தவிர்த்த நாசர், விஷால், கார்த்தி – பின்னணியில் நீடிக்கும் மர்மம்

- Advertisement -

நடிகர் மன்சூர் அலிகான், திரிஷாவுடன் சேர்ந்து நடிக்க முடியவில்லை என்ற கருத்தை, அவரது பாணியில் வில்லன் கேரக்டரில் நடிக்க பெட்ரூம் சீன் இல்லை, என்று கூறியதால், இது பிரச்னையானது. இதற்கு திரிஷா கண்டனம் தெரிவிக்க அது சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்த பிரச்னையில் இயக்குநர்கள் கார்த்திக் சுப்புராஜ், லோகேஷ் கனகராஜ், குஷ்பு, கஸ்தூரி என பலரும் கண்டனம் தெரிவிக்க, கடைசியில் தென்னிந்திய நடிகர் சங்கம் தரப்பிலும், மன்சூர் அலிகானுக்கு எதிராக கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

- Advertisement -

மன்சூர் அலிகான், 35 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் இருக்கிறார். நடிகராக, தயாரிப்பாளராக இருக்கிறார். 1990களில் ராஜாதி ராஜ, ராஜ மார்த்தாண்ட, ராஜ கம்பீர, காத்தவராய கிருஷ்ண காமராஜன் என்ற ஒரு படத்தையும் இயக்கினார். வில்லனாக, குணச்சித்திர நடிகராக, ஹீரோவாக 360 படங்களுக்கு மேல் நடித்தும் உள்ளார். இப்போது அவரது தயாரிப்பில், நடிப்பில் சரக்கு என்ற படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது.

அதே போல் திரிஷாவும் 20 ஆண்டுகளுக்கு மேலாக, தமிழ் சினிமாவில் நடிகையாக இருக்கிறார். பல வெற்றிப்படங்களில் நடித்திருக்கிறார், முன்னணி கதாநாயகியாகவம் வலம் வருகிறார். மன்சூர் அலிகான் பேச்சு குறித்த அவரது கண்டனத்தில் நியாயம் இருந்தாலும், வழக்குப்பதிவு செய்து கைது செய்யும் அளவுக்கு அவர் குற்றம் செய்யவில்லை என்பதே பலரது பார்வையாக உள்ளது.

- Advertisement -

இந்த விவகாரத்தில் மன்சூர் அலிகான் அளித்த ஒரு பேட்டியில், இதுகுறித்த நான் பேசுவதற்காக நடிகர் சங்க தலைவர் நாசருக்கும், செயலாளர் விஷாலுக்கும், பொருளாளர் கார்த்திக்கும் போன் செய்தேன். யாருமே போனை எடுக்கவில்லை. கார்த்தி, பிறகு அழைக்கிறேன் என்று சொன்னவர் பிறகு போனை எடுக்கவில்லை. நான் என்ன யாரும் கண்டுகொள்ளாத அனாதையா, என கோபமாக கேள்வி எழுப்பி இருந்தார்.

நடிகர் சங்க தலைவராக உள்ள நாசர், மிக மூத்த நடிகர். அனுபவம் மிக்கவர். விஷால், கார்த்தி முக்கிய பொறுப்பில் சங்கத்தில் இருப்பவர்கள். பல படங்களில் திரிஷாவுடன் நடித்தவர்கள். மன்சூர் அலிகான், திரிஷாவை நடிகர் சங்கத்துக்கு நேரில் வரவழைத்து, இருவரையும் பரஸ்பரம் பேசி இந்த பிரச்னைக்கு ஒரு மணி நேரத்தில் தீர்வு கண்டிருக்க முடியும். இருவரும் ஒன்றாக ஒரு பேட்டி கொடுத்திருந்தால் அத்தோடு இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி கிடைத்திருக்கும். தமிழ் சினிமாவில் அனைவரும் ஒரே குடும்பம் என கூறும் நடிகர் சங்கம், இருவரது மனஸ்தாபத்தை தீர்க்க, அதை செய்யாமல் வளரவிட்டு வேடிக்கை பார்த்தது ஏன், என்பதுதான் இப்போது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.

- Advertisement -

சற்று முன்