- Advertisement -
Homeபொழுதுபோக்கு100 கோடி ரூபாய் செலவில் தயாராகும் 2வது பாகம், வரும் டிசம்பரில் படப்பிடிப்பு துவக்கம் -...

100 கோடி ரூபாய் செலவில் தயாராகும் 2வது பாகம், வரும் டிசம்பரில் படப்பிடிப்பு துவக்கம் – காந்தாரா 2 படத்தின் புதிய அப்டேட்

- Advertisement -

தமிழ் சினிமாவில் மட்டுமல்ல, தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி படங்களில் கூட இப்போது அற்புதமான கதைகளை கொண்ட படங்கள் வெளியாகி வருகின்றன. முதலில் தமிழில், இந்தியில் மட்டுமே இதுபோன்ற படங்கள் வந்துக்கொண்டிருந்த நிலையில் கன்னடத்திலும் இதுபோன்ற படங்களை தர முடியும் என்று நிரூபித்த படம் காந்தாரா.

ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்து, தயாரித்த படம்தான் காந்தாரா. மிக குறைந்த பட்ஜெட்டில், அதாவது ரூ. 8 கோடி மதிப்பில் உருவான இந்த படம் கன்னடத்தில் மிகப்பெரிய வெற்றிப்படமாக ரசிகர்களால் வரவேற்கப்பட்டது. தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பிறமொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு ரிலீஸ் ஆனது.

- Advertisement -

கடந்தாண்டில் வந்த வெற்றிப்படங்களில் காந்தாரா படம் குறைந்த பட்ஜெட்டில் அதிக வசூலை குவித்தது, அதாவது மொத்த வசூல் 400 கோடி ரூபாய் என்று சாதனை படைத்தது. இந்த படத்தை பார்த்து அசந்துபோன ரஜினிகாந்த், தனது போயஸ் கார்டனில் உள்ள வீட்டுக்கு ரிஷப் ஷெட்டியை வரவழைத்து பாராட்டியது, பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில் காந்தாரா படத்தின் 2ம் பாகம் எப்போது வெளியாகும் என, ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்தது. பொது இடங்களில், சினிமா நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்ட ரிஷப் ஷெட்டியை ரசிகர்கள் உள்ளிட்ட பலரும், காந்தாரா 2 படம் எப்போது வெளிவரும் என்று கேட்டுக்கொண்டே இருந்தனர்.

- Advertisement -

இதையடுத்து இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் மாதம் துவங்க உள்ளது. இதற்கிடையே காந்தாரா 2 படத்தின் புதிய அப்டேட் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் 27ம் தேதி, மதியம் 12.25 மணிக்கு வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில் இது வெறும் வௌிச்சம் அல்ல, தரிசனம் என்ற கேப்சனும் அந்த அறிவிப்பில் இடம்பிடித்துள்ளது. காந்தாரா முதல் பாகத்தில் நடித்த நடிகர், நடிகையர் இரண்டாம் பாகத்திலும் இடம்பெறுவார்களா, 4ம் நூற்றாண்டு கதை என கூறப்படுவதும் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

சற்று முன்