- Advertisement -
Homeபொழுதுபோக்குதன் கணவர் சூர்யா பற்றிய உண்மையை, டைரக்டரிடம் போட்டுடைத்த நடிகை ஜோதிகா - இப்படியாம்மா ஒரு...

தன் கணவர் சூர்யா பற்றிய உண்மையை, டைரக்டரிடம் போட்டுடைத்த நடிகை ஜோதிகா – இப்படியாம்மா ஒரு மனுஷனை போட்டுக் கொடுப்பீங்க?

- Advertisement -

பிரபு, குஷ்பு போல தமிழ் சினிமாவில் சூப்பர் ஜோடியாக வலம் வந்தவர்கள் சூர்யா – ஜோதிகா. பல படங்களில் இவர்களது ஜோடிப் பொருத்தமும், நடிப்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. பூவெல்லாம் கேட்டுப்பார், காக்க காக்க, சில்லுனு ஒரு காதல், மாயாவி, பேரழகன் என பல படங்களில் ஜோடியாக நடித்திருந்தனர். ஒரு கட்டத்தில், நிஜவாழ்க்கையில் அவர்கள் திருமணம் செய்துக்கொண்டு தம்பதியாகி விட்டனர்.

திருமணத்துக்கு பிறகு குறிப்பிட்ட காலம் வரை நடிக்காமல் இருந்த ஜோதிகா, மீண்டும் தற்போது சிறந்த கேரக்டர்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார். அதாவது அவருக்கு மிகவும் முக்கியத்துவம் உள்ள கதைகளில், அவரது நடிப்பை வெளிப்படுத்த அதிக வாய்ப்புள்ள கேரக்டர்களில், குறிப்பாக வித்யாசமான கதைகளில் நடிக்க ஜோதிகா முன்னுரிமை தந்து வருகிறார். இதில் காதல் தி கோர் படம், ஜோதிகா கேரியரில் முக்கிய படமாக மாறியுள்ளது.

- Advertisement -

சமீபத்தில் மம்முட்டி – ஜோதிகா நடிப்பில் வெளிவந்து ரசிகர்களின் கவனத்தை அதிகமாக ஈர்த்த படம் காதல் தி கோர். இந்த படத்தை மலையாள இயக்குநர் ஜியோ பேபி இயக்கி இருந்தார். இந்த படத்தின் மூலம் மூவருக்குமே ரசிகர்கள் மத்தியில் பலத்த பாராட்டுகள் கிடைத்து வருகிறது. இதில் முதன்முறையாக மம்முட்டிக்கு மனைவியாக ஜோதிகா நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

காதல் தி கோர் படத்தின் இயக்குநர் ஜியோ பேபி சமீபத்தில் ஒரு நேர்காணலில் கூறுகையில், சென்னையில் உள்ள ஜோதிகா வீட்டுக்கு நேரில் சென்று, இந்த படத்தின் கதையை சொன்னேன். முதன்முறையாக அவர் வீட்டுக்கு அப்போதுதான் சென்றிருந்தேன்.

- Advertisement -

அப்போது அங்கு இருந்த சூர்யா எங்களை வரவேற்றார்ர். எங்கள் அனைவருக்கும் அவரே தேநீர் கொண்டு வந்து கொடுத்து உபசரித்தார். அதன்பின்பு மொபைல் ஆப் மூலம் நிறைய உணவு வகைகளை ஆர்டர் செய்தார். அனைவருக்கும் அந்த உணவு வகைகளை அவரே பரிமாறினார். அவரது விருந்தோம்பலில் நாங்கள் மிகவும் மகிழ்ந்து போனோம் என, ஜியோ பேபி பெருமிதமாக பேசி இருந்தார்.

இதுமட்டுமின்றி, காதல் தி கோர் ஷூட்டிங் நடந்த போது இதுபற்றி படத்தில் நடித்த ஜோதிகாவிடமும் டைரக்டர் ஜியோ பேபி பெருமையாக பேசியுள்ளார். அப்போது அவரிடம் நடிகை ஜோதிகா, இப்படி நண்பர்கள், உறவினர்கள் எங்கள் வீட்டுக்கு வரும்போது சூர்யா நிறைய வகையான உணவுகளை ஆர்டர் செய்வார். அதில் அவருக்கு பிடித்தமான பல உணவு வகைகளையும் ஆர்டர் செய்துகொள்வார். இப்படி விருந்தினர்கள் வரும்போதுதான் தனக்கு பிடித்தமான அயிட்டங்களை அதிகமாக சாப்பிட முடியும் என்பதால், அதிகளவில் உணவு ரகங்களை சூர்யா ஆர்டர் செய்கிறார் என்ற உண்மையை சொல்லி சிரித்திருக்கிறார் ஜோதிகா.

- Advertisement -

சற்று முன்