- Advertisement -
Homeபொழுதுபோக்குசுதா கொங்கரா இயக்கும் படத்தில் நிவின் பாலி, பகத் பாசில்… இருவரில் யாருக்கு வாய்ப்பு?...

சுதா கொங்கரா இயக்கும் படத்தில் நிவின் பாலி, பகத் பாசில்… இருவரில் யாருக்கு வாய்ப்பு? சிவகார்த்திகேயனுடன் வில்லனாக மோதப் போவது யார்?

- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி உள்ள அமரன் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. மறைந்த தமிழக ராணுவ வீரர் முகுந்த் வரதராஜன் கேரக்டரில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ளனர். அவரது மனைவி இந்து ரெபேகா வர்கீஸ் கேரக்டரில் சாய்பல்லவி நடித்துள்ளார். இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது.

இதையடுத்து ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் எஸ்கே 23 என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு இன்னும் டைட்டில் வைக்கப்படவில்லை. இதில் ருக்மணி வசந்த் நாயகியாக நடிக்கிறார். இந்த படத்தை தொடர்ந்து, டான் பட இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கும் ஒரு படத்திலும் சிவகார்த்திகேயன் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

- Advertisement -

இதற்கிடையே சுதா கொங்கரா இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். இது அவரது 25வது படமாகும். இந்தி எதிர்ப்பு சம்பவங்களை மையப்படுத்திய உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாகிறது. இந்த படத்தில் ஏற்கனவே நடிக்க கமிட் ஆகி நடிகர் சூர்யா விலகியது குறிப்பிடத்தக்கது.

சூரரைப் போற்று, இறுதிச்சுற்று போன்ற படங்களை இயக்கிய சுதா கொங்கரா தனது லட்சிய படமாக இந்த படத்தை உருவாக்க உள்ளார். மேலும் சிவகார்த்திகேயனுக்கு 25வது படமாகவும் இது அமைகிறது. புறநானூறு என்பதற்கு பதிலாக படத்துக்கு வேறு பெயர் வைக்கப்பட உள்ளது. அடுத்த மாதம் டிசம்பரில் ஷூட்டிங் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சம்மதித்து, பின்பு மறுப்பு தெரிவித்து விலகி விட்டார். பிறகு அதர்வா அந்த கேரக்டரில் நடிக்க கமிட் செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்த படத்தில் வில்லனாக நடிக்க மலையாள நடிகர் நிவின் பாலி கமிட் செய்யப்பட்டதாக சமீபத்தில் தகவல் வெளியானது. அவரும் ஒரு சிறந்த நடிகர் என்பதால் படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்தது.

இப்போதைய லேட்டஸ்ட் நிலவரப்படி, எஸ்கே 25 படத்தில் நடிகர் பகத் பாசில் நடிக்க உள்ளதாகவும் தெரிய வருகிறது. நிவின் பாலிக்கு முன்னதாக நடிகர் பகத் பாசில் இந்த படத்தில் நடிக்க கேட்டதாகவும், அவர் நடிக்க விருப்பம் இருந்தும் கால்ஷீட் இல்லாததால் மறுத்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் 2 மாதங்கள் தாமதாக டிசம்பரில் ஷூட்டிங் துவங்க இருப்பதால் அவரது கால்ஷீட் கிடைக்க வாய்ப்புள்ளதால், பகத் பாசிலும் இதில் நடிப்பார் என்று கூறப்படுகிறது. அதனால் வில்லன் பகத் பாசிலா, நிவின் பாலியா என்பதில் சந்தேகம் நீடிக்கிறது.

- Advertisement -

சற்று முன்