கடந்த 1990 – 2010ம் ஆண்டுகள் காலகட்டத்தில் நடிகர்கள் விஜய் அஜீத்குமார் பல படங்களில் நடித்தார். ஆரம்பத்தில் அறிமுக ஹீரோக்களாக இருந்து பிறகு படிப்படியாக வெற்றிப் படங்களை கொடுத்து முன்னுக்கு வந்தார்கள். இதில் பூவே உனக்காக காதலுக்கு மரியாதை துள்ளாத மனமும் துள்ளும் குஷி போன்ற படங்கள் விஜய்க்கு முன்னணி நடிகர் அந்தஸ்தை கொடுத்தது.
அதே போல் அமராவதி படத்தில் அறிமுகமான அஜீத்குமாருக்கு ஆசை காதல் கோட்டை தீனா வாலி போன்ற படங்கள் முன்னணி நடிகர் அந்தஸ்தை பெற்றுத் தந்தது. பிறகு விஜய் அஜீத்குமார் இருவருமே ஆக்சன் ஹீரோக்களாக மாறினர். கமர்ஷியல் ஹிட் படங்களை கொடுத்ததால் அவர்களும் ரஜினி கமலுக்கு அடுத்தபடியாக நட்சத்திர ஹீரோக்களாக தமிழ் சினிமாவில் உருவாகினர்.
அஜீத்குமார் விஜய் வளர வளரவே அவர்களது ரசிகர்கள் கூட்டமும் பெருகியது. சினிமா தியேட்டர்களில் பொதுவெளிகளில் பிறகு சமூக வலைதளங்களில் விஜய் அஜீத்குமார் ரசிகர்கள் கடுமையாக மோதிக்கொண்டனர். தல தளபதி என 2 பிரிவுகளாக நின்றுக்கொண்டு ஆவேசத்தை வெளிப்படுத்தினர்.
அதற்கேற்ப விஜய் நடித்த படங்களில் அஜீத்குமாரை மறைமுகமாக தாக்கும் சில வசனங்களும் காட்சிகளும் பாடல் வரிகளும் இருந்தன. அதே போல் அஜீத்குமார் நடித்த படங்களில் விஜயை மறைமுகமாக தாக்கும் சில வசனங்களும் காட்சிகளும் பாடல் வரிகளும் இருந்தன. இது இருதரப்பு ரசிகர்களையும் நன்றாக உசுப்பேத்தி விட்டு வேடிக்கை பார்த்தது.
ஆனால் இப்போது விஜய் அரசியலுக்கு வந்த பிறகு முதல்வர் ஆன பிறகு அஜீத்குமார் விஜயுடன் நட்பு பாராட்டுகிறார். லண்டன் வந்த விஜயை கட்டியணைத்து முத்தமிடுகிறார். மாண்புமிகு முதல்வர் என்று கொஞ்சி குலாவுகிறார். இது தல ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இதுகுறித்து சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது பதிவில் கூறியிருப்பதாவது, நீ என்ன உருகும் பனிமலை நான் தானே எரிமலை எரிமலை என்று அப்போது மோதினார்கள்.
இதைப் பார்த்து அணில் குஞ்சுகளும் ஆமை குஞ்சுகளும் தியேட்டர் மற்றும் சோசியல் மீடியாவில் மோதிக்கொண்டன. இதை வைத்து தல அண்டு தளபதி பல கோடி சம்பாதித்து விட்டார்கள். நேரம் மற்றும் பணத்தை வீணாக்கிய அணில் மற்றும் ஆமைக்குஞ்சுகள் நிலை பாவம் என்று விஜய் மற்றும் அஜித்குமார் லண்டன் சந்திப்பு குறித்து ப்ளு சட்டை மாறன் கிண்டலாக ஒரு பதிவை செய்திருக்கிறார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.





