நடிகர் விஜய் நடிப்பில் இப்போது கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் (கோட்) படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 90 சதவீதம் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இன்னும் 10 சதவீத படப்பிடிப்பே பாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. அந்த மீதிக் காட்சிகள் ரஷ்யாவில் படமாக்கப்படுகின்றன.
கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக சென்னை மற்றும் ஐதராபாத்தில் விஜய் படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. இதன்பிறகு ரஷ்யாவில் இறுதி காட்சிகள் எடுக்கப்படுகின்றன. சென்னையில் வெங்கட்பிரபு உள்ளிட்ட படக்குழு பிஸியாக இருந்ததால், படத்தை தயாரிக்கும் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, ரஷ்யா சென்று படப்பிடிப்புக்கான லொகேஷன்களை பார்த்து, செலக்ட் செய்துள்ளார்.
விஜய் படத்தை பொறுத்த வரை அதன் அடுத்தடுத்த அப்டேட் என்ன என்று தெரிந்துக்கொள்வதில் விஜய் ரசிகர்கள் மிக ஆர்வமாக இருந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி இனி அரசியல்தான் எனது அடுத்த பயணம் என்ற முடிவுக்கு விஜய் வந்துவிட்டார். விஜய் படங்களை தொடர்ந்து பார்க்க ஆசைப்பட்ட ரசிகர்களுக்கு இது பலத்த ஏமாற்றத்தை, வருத்தத்தை தந்துள்ளது.
இந்த படத்தை முடித்து விட்டு ஏப்ரலில் மதுரையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டை நடத்துவதற்கான பணிகளை இப்போதே முடுக்கி விட்டுள்ள விஜய், அடுத்து இன்னும் ஒரே படத்தில் மட்டும் நடிக்கவே தீர்மானித்துள்ளார். அந்த படத்தை கார்த்திக் சுப்பராஜ் அல்லது ஆர்ஜே பாலாஜி இருவரில் ஒருவருக்கு வாய்ப்பளிக்க விஜய் முடிவு செய்துள்ளார்.
இதற்கிடையே நடிகர் விஜய் நடித்து வரும் கோட் படம் குறித்த அப்டேட் கேட்டு இயக்குநர் வெங்கட்பிரபுவின் வலைதள பக்கத்தில் ரசிகர்கள் பலரும் அடிக்கடி மெசேஜ் செய்வது வழக்கம். வெங்கட்பிரபு ரசிகர்களின் கேள்விக்கு பதில் சொல்வதும் வழக்கம். அப்படிப்பட்ட சூழலில் விஜய் ரசிகர் ஒருவர் உச்சகட்ட கோபத்தில், வெங்கட்பிரபுவை கெட்ட வார்த்தையில் திட்டியுள்ளார்.
Sollalaam nu nenechen! Ippo idhukku mela eppadi nu neengaley sollunga #VijaynaBloods https://t.co/veDfLSx2Hp
— venkat prabhu (@vp_offl) March 1, 2024
அதாவது, கடந்த ஒரு வாரத்துக்கு முன் வெங்கட்பிரபு தனது பதிவு ஒன்றில், விஜய் படம் அப்டேட் குறித்த கேள்விக்கு டூ ஏர்லி ( அதாவது மிக விரைவில்) என்று பதில் சொல்லி இருந்தார். ஆனால் ஒரு வாரமாகியும் எந்த அப்டேட்டும் இல்லை. இதனால் ஆவேசமான ரசிகர், டூ ஏர்லின்னு சொல்லி 1 வீக்கு ஆகுது, டேய்…. அட்டேட் விட்றா… என கெட்ட வார்த்தையால் வெங்கட்பிரபுவை திட்டி பதிவிட்டுள்ளார். அதுக்கு பதிலளித்துள்ள வெங்கட்பிரபு, சொல்லலாம்ன்னு நினைச்சேன். இப்போ இதுக்கு மேல எப்படின்னு நீங்களே சொல்லுங்க விஜய்ணா ப்ளூட்ஸ் என பதில் பதிவிட்டுள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.





