தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகியாக வலம் வருபவர் திரிஷா. கடந்த 2003ம் ஆண்டில் லேசா லேசா படம் மூலம் நாயகியாக அறிமுகமான திரிஷா 23 ஆண்டுகளாக கதாநாயகியாக நடித்து வருகிறார். முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நட்சத்திர நடிகையாகவும் இருக்கிறார்.
நகமும் சதையும் பிரிக்க முடியாதது என்பது போல நடிகை திரிஷாவையும் சர்ச்சையையும் பிரிக்க முடியாது என்கிற நிலையில் தான் பல ஆண்டுகளாக திரிஷா பற்றிய சர்ச்சைகளும் விமர்சனங்களும் இருந்து வருகின்றன. குறிப்பாக கடந்த 2 மாதங்களாக சர்ச்சையான விஷயங்களை மட்டுமே அவரை பற்றி பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.
இந்த சூழலில் நடிகை திரிஷாவுக்கு சமீபத்தில் வெளியான கருப்பு திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்து அவருக்கு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் கொடுத்துள்ளது. இந்த நிலையில் ரசிகர் ஒருவர் தனது வலைதள பக்கத்தில் நடிகை திரிஷா குறித்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அவர் அந்த பதிவில், நடிகர் விஜயுடன் திரிஷா இணைந்து நடித்த கில்லி நடிகர் சூர்யாவுடன் திரிஷா இணைந்து நடித்த ஆறு மற்றும் நடிகர் அஜீத்குமார் உடன் திரிஷா இணைந்து நடித்த மங்காத்தா ஆகிய 3 படங்களும் அந்த ஹீரோக்களுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த படங்கள் என்று கூறியுள்ளார்.
மேலும் இந்த மூன்று படங்களிலுமே நடிகை திரிஷா கருப்பு உடை அணிந்து பாடல் காட்சிகளில் நடித்திருந்ததை சுட்டிக்காட்டியுள்ள அந்த ரசிகர் இதனாலேயே அந்த படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. அந்த வகையில் திரிஷாவை கருப்பு ஸ்டார் என்று குறிப்பிடலாம் என்றும் தனது பதிவில் அந்த ரசிகர் கூறியிருக்கிறார்.
தனது ரசிகரின் இந்த பதிவை பார்த்த நடிகை திரிஷா மிகவும் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார். இதற்கு அவர் அளித்த பதிலில், இது மிகவும் அழகாக இருக்கிறது. நன்றிகள் என்று கூறி சில ஸ்மைலி எமோஜிகளை பகிர்ந்து கொண்டுள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





