கடந்த 10 ஆண்டுகளாக நடிகர் சூர்யா நடித்த படங்கள் எதுவும் பெரிய ஹிட் கொடுக்கவில்லை. குறிப்பாக சிங்கம் 2 படத்துக்கு பிறகு அவர் நடித்த 10க்கும் மேற்பட்ட படங்கள் மிகப்பெரிய தோல்வி படங்களாக இருந்தன. நிச்சயம் மாஸ் ஹிட் என எதிர்பார்க்கப்பட்ட பல படங்கள் இதில் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்தன.
அதில் சிங்கம் 3 அஞ்சான் பசங்க 2 என்ஜிகே தானா சேர்ந்த கூட்டம் எதற்கும் துணிந்தவன் மாசு என்கிற மாசிலாமணி காப்பான் 24 கங்குவா என தொடர்ச்சியாக வெளியான இந்த 10 படங்களும் மோசமான தோல்வி படங்களாக இருந்தன. இதற்கிடையே நேரடியாக ஓடிடியில் வெளியான ஜெய்பீம் சூரரைப் போற்று படங்கள் மட்டுமே வணிக ரீதியான வெற்றிப் படங்களாக இருந்தன.
அதிலும் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்த கங்குவா படம் மிகப்பெரிய ஏமாற்றத்தை ரசிகர்களுக்கு தந்தது. சூர்யா நடித்த படங்களில் மிக மோசமான கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது கங்குவா படம்தான். இந்த படத்தின் 2ம் பாகம் எடுக்கப்படும் என்று கூறிய நிலையில் அந்த திட்டம் கைவிடப்பட்டதாகவே தெரிகிறது.
கங்குவா படத்துக்கு பின் நடிகர் சூர்யா நடித்த ரெட்ரோ படம் கடந்த ஆண்டு மே மாதம் 1ம் தேதி தொழிலாளர் தினத்தன்று வெளியானது. அதன்பிறகு 10 மாதங்களாக இன்னும் சூர்யா நடித்த அடுத்த படம் திரைக்கு வரவில்லை. ரெட்ரோ படத்துக்கு பிறகு நடிகர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்த 45வது படம் கருப்பு.
இந்த படம் கடந்தாண்டு தீபாவளிக்கே ரிலீஸ் செய்யப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் சாட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமம் விற்பனை ஆகாத நிலையில் இந்த படம் திரைக்கு வராமல் தள்ளி தள்ளி போனது. ஒவ்வொரு முறையும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு பிறகு ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்து தள்ளி வைக்கப்பட்டது. இது சூர்யா ரசிகர்களை விரக்தியடைய செய்தது.
கடைசியாக இந்த மாதம் 19ம் தேதி ரிலீஸ் என சொல்லப்பட்ட கருப்பு படம் இப்போது ஏப்ரல் 10ம் தேதி ரிலீஸ் என்றும் தகவல் வெளியானது. ஆனால் குறிப்பிட்டபடி வரும் ஏப்ரல் 10ம் தேதியும் படம் திரைக்கு வருமா என்பதில் இப்போது குழப்பமும் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் ஏப்ரல் முதல் வாரத்தில் சட்டசபை தேர்தல் வரப்போகிறது என்று ஒரு தகவல் பரவி வருகிறது. அப்படி தேர்தல் வரும் பட்சத்தில் ஏப்ரல் 10ம் தேதி கருப்பு படம் ரிலீஸ் ஆக வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.





