- Advertisement -
Homeபொழுதுபோக்குமாரி செல்வராஜ் எனக்கு அப்பா மாதிரி... மேடையில் மனம் நெகிழ்ந்த விக்ரமின் மகன்... கவனம் ஈர்த்த...

மாரி செல்வராஜ் எனக்கு அப்பா மாதிரி… மேடையில் மனம் நெகிழ்ந்த விக்ரமின் மகன்… கவனம் ஈர்த்த வாழை பட நிகழ்ச்சி…

- Advertisement -

தனது அசாத்தியமான நடிப்பால் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இடத்தில் இருப்பவர் நடிகர் விக்ரம். அண்மையில் அவர் நடிப்பில் வெளியான தங்கலான் திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. இருப்பினும் விக்ரமின் நடிப்பு அதில் பாராட்டப்பட்டது. நிச்சயம் இந்த திரைப்படத்திற்காக விக்ரம் விருது பெறுவார் என்று பலரும் கூறி வருகிறார்கள்.

 

- Advertisement -

இவரது மகன் துருவ் விக்ரம் ஆதித்யவர்மா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தெலுங்கில் மிகப்பெரும் வெற்றி பெற்ற அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் ரீமேக்காக இது வெளியிடப்பட்டது. முதலில் இதனை பாலா தான் இயக்கினார். ஆனால் அது சரியாக இல்லை என்று கூறி தயாரிப்பு நிறுவனம் மீண்டும் இந்த திரைப்படத்தை எடுக்க முடிவு செய்தது.

 

- Advertisement -

ஆனால் அப்படி எடுக்கப்பட்ட ஆதித்யவர்மா திரைப்படமும், துருவ் விக்ரமுக்கு சிறந்த படமாக அமையவில்லை. இதனைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், தனது தந்தை விக்ரம் நடித்த மகான் படத்தில் துருவ் நடித்திருந்தார். விமர்சன ரீதியாக இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

 

ஆனால் நேரடியாக ஓடிடி தளத்தில் இந்த திரைப்படம் வெளியானதால், மகான் திரைப்படம் அந்த அளவு ரசிகர்களை போய் சேரவில்லை. இதனைத் தொடர்ந்து துருவ் விக்ரம், மாரி செல்வராஜுடன் பைசன் படத்திற்காக இணைந்தார். திருநெல்வேலி சுற்றுவட்டார பகுதிகளில், கபடியை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்படும் என்பதால், அந்த விளையாட்டுக்கான பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டார்.

 

இதன் நடுவே மாரி செல்வராஜ் மாமன்னன் படத்தை எடுக்கச் சென்றார். இருப்பினும் பிற படங்களில் ஒப்புக் கொள்ளாமல், துருவ் பைசன் படத்திற்காக கடுமையாக உழைத்தார். தற்போது அந்த திரைப்படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இது நடுவே மாரி செல்வராஜ் இயக்கி இருக்கும் வாழை திரைப்படத்தின் பிரீ ரிலீஸ் ஈவென்ட் சென்னையில் நடைபெற்றது.

 

இதில் இயக்குனர்கள் பா ரஞ்சித், மிஷ்கின், நெல்சன், வெற்றிமாறன், நடிகர்கள் கவின், ஹரிஷ் கல்யாண், துருவ் விக்ரம் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். அப்போது பேசிய துருவ், நான் வாழை படத்தை கடந்த ஆண்டே பார்த்து விட்டேன். மாரி செல்வராஜ் சார் வாழ்க்கையில் இவ்வளவு சோகங்கள் இடம்பெற்று இருப்பது படத்தை பார்க்கும் போது தெரிந்தது. அத்தனையும் மீறி தனது கடின உழைப்பால் அவர் வெற்றி பெற்று இருக்கிறார். எனது தந்தைக்குப் பிறகு கடினமாக உழைப்பதை மாரி செல்வராஜிடம் பார்த்திருக்கிறேன். அவர் எனக்கு தந்தை மாதிரி ஒரு அண்ணன் மாதிரி என்று உருக்கமாக பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்