- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த ஒரு விஷயத்தில் ஜெயித்தது விஜய், சூர்யா மட்டுமே - சிகரம் தொட்ட ஜீனியஸ்களால் ...

அந்த ஒரு விஷயத்தில் ஜெயித்தது விஜய், சூர்யா மட்டுமே – சிகரம் தொட்ட ஜீனியஸ்களால் தங்களது ஜூனியர்களை கரையேத்த முடியலையே…

- Advertisement -

தமிழ் சினிமாவில் சாதனை நாயகர்களாக சாதித்தவர்கள் பலர் இருக்கின்றனர். சினிமா பின்புலமே இல்லாமல் உள்ளே வந்து இப்போது உச்சத்தில் இருப்பவர்களாக பலரை அடையாளம் காட்ட முடியும். உதாரணமாக ரஜினிகாந்த், விஜயகாந்த், சத்யராஜ், சரத்குமார் குறிப்பாக அஜீத்குமார் இவர்கள் எல்லாம் யாருடைய தயவுமே இல்லாமல் சினிமாவில் நுழைந்து சாதித்துக் காட்டியவர்கள்.

ஆனால் ஜீனியஸ்களாக உள்ள கலைத்துறை சாதனை நடிகர்களால், இயக்குனர்களால் தங்களது வாரிசுகளை, கலையுலகில் சாதிக்க வைக்க முடியவில்லை. குறிப்பாக இப்பேர்ப்பட்ட சாதனையாளராக இருந்தும் சொந்த வாரிசுக்கு அடையாளத்தை தர முடியவில்லை என்று அவர்களது ரசிகர்ளே அங்கலாய்க்கும் அளவுக்கு மிக மோசமான ஒரு நிலையை, தமிழ் சினிமாவில் காண முடிகிறது.

- Advertisement -

குறிப்பாக இயக்குனர் இமயம் பாரதிராஜா, அவரது மகன் மனோஜ் பல படங்களில் நடித்தும் முன்னணிக்கு வர முடியவில்லை. பாரதிராஜா போராடிப் பார்த்து ஓய்ந்து போய் விட்டார். அதே போல் இயக்குனர் மணிவண்ணன் மகன் ரகுவண்ணன் இரு படங்களில் நடித்தார். அவர் நடித்தாரா என்று ஆச்சரியமாக கேட்கும் அளவுக்குதான் அவரது படங்கள் தியேட்டர்களுக்கு வந்து சென்றது.

இன்றும் கட்டப்பாவாக கலக்கிக்கொண்டு இருக்கும் சத்யராஜ் மகன் சிபிராஜ், பல படங்களில் நடித்தும் பெரிதாக பெயர் வாங்க முடியவில்லை. அதேபோல் இயக்குனர் கே பாக்யராஜ் எத்தனையோ பேரை சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தவர். கவுண்டமணி செந்தில் கூட பாக்யராஜ் அறிமுகம்தான். ஆனால் கே பாக்யராஜ் மகன் ஷாந்தனு இன்னும் அறிமுக நாயகனாகவே தமிழ் சினிமாவில் இருக்கிறார்.

- Advertisement -

அதே போல் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பேரன், நடிகர் பிரபுவின் விக்ரம் பிரபுவும் தமிழ் சினிமாவில் நுழைந்து பல ஆண்டுகளாகிறது. கும்கி ஒரு படம் தவிர அவரது படங்கள் எதுவும் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. அதே போல் இயக்குனர் பி வாசு மகன் சக்தி, பாண்டியராஜன் மகன் பிருத்திவிராஜ் போன்றவர்கள் சில படங்களில் நடித்தும், பி வாசு மகன், பாண்டியராஜன் மகன் என்ற அடையாளங்கள் மட்டுமே இருக்கிறது.

ஆனால் இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர் மகன் என்ற அடையாளத்துடன் சினிமாவுக்குள் வந்து இந்து உச்சநட்சத்திரமாக ஜொலிப்பவர் நடிகர் விஜய். ஒரு படத்துக்கு 200 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் ஒரே நடிகர் விஜய்தான். தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியின் தலைவராகவும் இப்போது வலம் வருகிறார். எதிர்கால தமிழக அரசியலில் சிம்ம சொப்பனமாக இருப்பார் என்றும் கூறப்படுகிறது. அதே போல் நடிகர் சிவக்குமாரின் மகன் சூர்யாவும், ஒரு வாரிசு நடிகராக பெரிய வெற்றிகளை பெற்று முன்னணி நாயகனாக இருக்கிறார். ஆக வாரிசு நடிகர்களில் பெரிய அளவில் ஜெயித்தது விஜய், சூர்யா மட்டுமே.

- Advertisement -

சற்று முன்