- Advertisement -
Homeபொழுதுபோக்குமதுரையில் நடந்த தவெக மாநாட்டில் முதல்வர் ஸ்டாலினை கலாய்த்த நடிகர் விஜய் மீது போலீசில் புகார்...

மதுரையில் நடந்த தவெக மாநாட்டில் முதல்வர் ஸ்டாலினை கலாய்த்த நடிகர் விஜய் மீது போலீசில் புகார் – பவுன்சர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!

- Advertisement -

கடந்த 21ம் தேதி மதுரையில் உள்ள பாரபத்தியில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் 2வது மாநில அரசியல் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் பங்கேற்ற கட்சியின் தலைவர் விஜய், திமுக தலைவர் மற்றும் தமிழக முதலமைச்சருமான முக ஸ்டாலினை அங்கிள் அங்கிள் என்று கலாய்த்து பேசியிருந்தார். வாட் அங்கிள் இட் ஈஸ் வெரி ராங்க் அங்கிள் என்றும் கிண்டலாக பேசியிருந்தார்.

இதுகுறித்து திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை சேர்ந்த வக்கீல் சிவசாகர் என்பவர் திருத்துறைப்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு புகார் மனு ஒன்றை ஆன்லைன் மூலம் பதிவு செய்திருக்கிறார். அதில் நடிகர் விஜய் மீதும் அவரது பவுன்சர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க கோரியிருக்கிறார். அந்த புகார் மனுவில் வக்கீல் சிவசாகர் கூறியிருப்பதாவது, மதுரையில் கடந்த 21ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் 2வது மாநில மாநாடு நடந்தது.

- Advertisement -

அந்த மாநாட்டில் தவெக கட்சியின் தலைவர், திரைப்பட நடிகர் விஜய் தலைமை வகித்து பேசினார். அந்த மாநாட்டில் விஜய் பேசும் போது தமிழக முதல்வரை கடுமையாக விமர்சித்தும் அவதூறாக பேசியும் அவரை அங்கிள் என்றும் அழைத்தார். அவரது அரசியல் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கத்துடன் நடிகர் விஜய் பேசியது ஒரு தமிழனாக எனக்கு துயரத்தை ஏற்படுத்தியது.

மேலும் நடிகர் விஜய் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியால் தமிழக முதல்வர் ஸ்டாலினை வசை பாடி உள்ளார். இந்திய அரசியலமைப்பு சார்பில் பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழ்நாடு மாநிலத்தை நிர்வாகம் செய்து ஆட்சி செய்து வரும் முதல்வரை, தனது கட்சி ஆதாயம் பெறுவதற்காக அவதூறாக விஜய் பேசி செயல்பட்டுள்ளார்.

- Advertisement -

ஒரு அரசியல் கட்சியின் தலைவராக இருந்துக்கொண்டு அவரது மாநாட்டுக்கு வரும்போது, அவரது கட்சி தொண்டரை விஜயின் பாதுகாவலர்கள் மனிதநேயமற்ற முறையில் நடைமேடையில் இருந்து தூக்கி எறிந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானது. இது மனிதத் தன்மையற்ற செயலாகும். தமிழ்நாடு அரசையும் தமிழ்நாடு முதல்வரையும் அவதூறாக, அரசுக்கு எதிராக பொதுமக்களிடையே வெறுப்பை ஏற்படுத்தி தனது கட்சியை வளர்க்கும் நோக்கில் விஜய் செயல்பட்டிருக்கிறார். நடைமேடையில் வந்தவர்களை தூக்கி எறிந்த மனித உரிமை மீறல் செயலாகும்.

எனவே தவெக மாநாட்டில் தமிழக முதல்வரை அவதூறாக விமர்சித்த நடிகர் விஜய் மற்றும் மனிதநேயமற்ற முறையில் நடந்துக்கொண்ட அவரது பவுன்சர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் அவர் கூறியிருக்கிறார். ஏற்கனவே சிவகாசி படத்தில் வக்கீல்களை அவதூறாக சித்தரித்ததற்காக நடிகர் விஜய்க்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், நடிகர் விஜய் மன்னிப்பு கோரியிருந்தார் என்ற தகவலையும் அவர் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

சற்று முன்