- Advertisement -
Homeபொழுதுபோக்குதிடீரென அரசியல் களத்தில் குதித்த அஜீத் ரசிகர்கள், பொதுச்செயலாளர் பதவியை ஏகே ஏற்பாரா? - தல...

திடீரென அரசியல் களத்தில் குதித்த அஜீத் ரசிகர்கள், பொதுச்செயலாளர் பதவியை ஏகே ஏற்பாரா? – தல தளபதி மோதல் அரசியலிலும் தொடருமா?

- Advertisement -

சினிமாவில் நடிப்பதற்கே நேரம் ஒதுக்காமல் கார் ரேஸ்சில் ஆர்வம் காட்டி வருபவர் நடிகர் அஜீத்குமார். குட் பேட் அக்லி படத்துக்கு பிறகு பல மாதங்களாக அவர் சினிமாவில் நடிக்காமல் கார் ரேஸ்சில் பங்கேற்று வருகிறார். இந்த சூழலில் அவரது அடுத்த படம் டேர் டெவில் வருகிற நவம்பரில் படப்பிடிப்பு துவங்க உள்ளது.

இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் இன்று அஜீத்குமார் ரசிகர்கள் சார்பில் தமிழக மக்கள் கழகம் என்ற அரசியல் இயக்கத்தை துவங்கி கட்சி கொடியை அறிமுகம் செய்துள்ளனர். மேலும் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியை காலியாக வைத்திருப்பதாகவும் அந்த பதவிக்கு எப்போது வேண்டுமானாலும் அஜீத்குமார் வரலாம் என்றும் கூறியிருக்கின்றனர்.

- Advertisement -

பல ஆண்டுகளுக்கு முன்பே தனக்கு ரசிகர் மன்றங்களே வேண்டாம் என்று அதை கலைத்தவர் நடிகர் அஜீத்குமார். விஜய் ரசிகர்களை எதிர்த்தும் விஜயை எதிர்த்தும் பல ஆண்டுகளாக அஜீத்குமார் ரசிகர்கள் போராடி வந்த நிலையில், அந்த ரசிகர்களின் உணர்வுகளை துச்சமாக மதித்து சமீபத்தில் விஜயை லண்டன் வரவழைத்து அவரை கட்டியணைத்து பாசத்தை வெளிப்படுத்தியவர் அஜீத்குமார்.

அதாவது ரசிகர்களின் உணர்வை மதிக்காமல் விஜய் மீது அன்பு காட்டி அவரிடம் பாசத்தை பொழிந்து ரசிகர்களின் வெறுப்பை அதிருப்தியை அஜீத்குமார் பெருமளவில் பெற்றிருக்கிறார். ஆனால் இதற்கு பின்னால் வணிக ரீதியான ஒரு கணக்கு இருக்கிறது என்று பலரும் கூறி வருகின்றனர். ஆனால் பணத்தை விட தன்மானம் முக்கியம் என்று இதை ஏற்றுக்கொள்ள அஜீத் ரசிகர்கள் தயாராக இல்லை.

- Advertisement -

இப்படிப்பட்ட ஒரு சூழலில் அஜீத்குமார் ரசிகர்கள் புதிய அரசியல் இயக்கத்தை அவர்களாகவே துவங்கி இருக்கின்றனர். ஆனால் இதை நிச்சயமாக அஜீத்குமார் ஏற்றுக்கொள்ளப் போவது இல்லை. இன்னும் ஓரிரு தினங்களில் தனது மேனேஜர் சுரேஷ் சந்திரா மூலமாக, இந்த அரசியல் கட்சிக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர்கள் என்னுடைய ரசிகர்களும் இல்லை என்று அஜீத்குமார் அறிக்கை வெளியிடுவதற்கும் வாய்ப்புள்ளது.

ஏனென்றால் நடிகர் விஜயை பொருத்த வரை, அரசியல் லாபம் மற்றும் வணிக லாபத்துக்காக தனது ரசிகர்களே என் உயிர் என்று ரீல் விட்டு ஏமாற்றுவார். என் நெஞ்சில் குடியிருக்கும் என்று டயலாக் பேசுவார். அப்படி பொய்யாக கூட தனது ரசிகர்களை மதிப்பது போல் நடிக்காமல், ரசிகர்களை கண்டாலே எனக்கு அலர்ஜி என்பவர் அஜீத்குமார். அதனால் அவர் அரசியலுக்கு வர மாட்டார். அதே நேரத்தில் தனது படங்களை ரசிகர்கள் பார்த்தால் கோடிக்கணக்கில் வருமானம் கிடைத்தால் அதை மட்டுமே ஏற்றுக்கொள்வார் என்று சினிமா விமர்சகர்கள் கூறுகின்றனர்.

- Advertisement -

சற்று முன்