நாங்கள் வெறுப்பு அரசியல் நடத்த வரவில்லை. நாகரீகமாக அரசியல் செய்வோம். மக்கள் நலன் மட்டுமே எங்களுக்கு முக்கியம். என்னை வாழ வைத்த மக்களுக்கு நன்றி கடன் செலுத்தவே கட்சி துவங்கி ஆட்சிக்கு வர ஆசைப்படுகிறேன் என்று விக்கிரவாண்டியில் நடந்த தவெக முதல் மாநாட்டில் பேசி மக்களின் மனதை கவர்ந்தவர் அக்கட்சியின் தலைவராக விஜய்.
ஆனால் அந்த மாநாடு துவங்கி நடந்து முடிந்த சட்டசபை கூட்டத்தொடர் வரை அவர் கேவலமாக விமர்சித்து பேசுவது திமுகவை மட்டும்தான். முதலில் அன்றைய முதல்வராக இருந்த ஸ்டாலினை அங்கிள் அங்கிள் என்று கலாய்த்தார். வாட் ப்ரோ வெரி ராங்க் ப்ரோ என்று கிண்டல் செய்தார். திமுகவை சகட்டு மேனிக்கு வசைபாடி ஆட்சிக்கு வந்தார்.
ஆனால் 108 தொகுதிகளில் வென்ற தவெகவுக்கு ஆட்சியமைக்க மறைமுகமாக உதவியதே திமுக தான். திமுக கூட்டணியில் போட்டியிட்டு ஜெயித்த காங்கிரஸ் 5 கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா 2 விடுதலை சிறுத்தைகள் 2 முஸ்லீம் கட்சி 2 என 13 எம்எல்ஏக்களின் ஆதரவில்தான் தவெக ஆட்சி இன்று வரை நடந்து வருகிறது. திமுக தயவால் தான் இந்த ஆட்சி இன்னும் கவிழாமல் நடந்து வருகிறது.
ஆனால் கொஞ்சம் கூட அதை நினைக்காமல் எங்க அப்பாவை காணோம் என்று ஸ்டாலினை கலாய்ப்பதும் மிசா கைது நடவடிக்கையில் ஸ்டாலின் தாடை உடைந்த சம்பவத்தையும் சட்டசபையில் சைகை செய்து காட்டி முதல்வர் விஜய் அநாகரிகமாக நடந்துக்கொண்டது தமிழக அரசியல் கட்சிகளுக்கு கடும் வெறுப்பை ஏற்படுத்தியது.
அதே போல் சட்டசபையில் ஆதவ் அர்ஜூனா புஸ்லி ஆனந்த் நிர்மல் குமார் ரமேஷ் மரியவில்சன் வினோத் போன்றவர்கள் பேசுகிற விதமும் பேசுகிற தொனியும் அவர்கள் முதல்முறையாக எம்எல்ஏவாகி அமைச்சர் ஆனவர்களா, அல்லது 50 ஆண்டுகள் அமைச்சர்களாக இருந்து ஆட்சி செய்தவர்களா என்கிற அளவுக்கு மக்களுக்கு சந்தேகம் ஏற்படுகிறது. எந்த துறை குறித்து கேள்வி கேட்டாலும் திமுகவை நொட்டை சொல்லும் அரசியலை மட்டுமே தவெக அமைச்சர்கள் தொடர்ந்து செய்து வருகின்றனர்.
சமீபத்தில் மதுரை மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கு விழாவை தவெக அமைச்சர்கள் அலங்கோலமாக நடத்தி அசிங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்து. தொடர்ந்து ஆணவப்போக்கோடு வெறுப்பு அரசியல் நடத்தி வரும் தவெக அரசுக்கு முடிவு கட்ட கம்யூனிஸ்ட் கட்சிகள் முடிவு செய்துவிட்டனர். இடைத்தேர்தல் முடிவுக்கு பிறகு தவெக அரசுக்கு பெரிய சிக்கல் காத்திருக்கிறது என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.





