தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகளில் அதிமுக சார்பில் கடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் சத்தியபாமா மற்றும் மரகதம் குமரவேல். ஆனால் அதிமுக தோ்தலில் தோல்வியடைந்த 3ம் இடத்துக்கு சென்ற நிலையில் இவர்கள் இருவரும் தவெக கட்சிக்கு தாவி விட்டனர். தங்களது எம்எல்ஏ பதவியையும் ராஜினாமா செய்து விட்டனர்.
இப்போது இந்த 2 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு வருகிற அக்டோபர் 6ம் தேதி ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது. இதில் தவெக சார்பில் மீண்டும் சத்யபாமாவே போட்டியிடுகிறார். அதே போல் மதுராந்தகம் தொகுதியிலும் மரகதம் குமரவேல் தவெக வேட்பாளராக போட்டியிடுகிறார். இருவரும் கடந்த 10 நாட்களாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வழக்கமாக ஒரு தொகுதியில் இடைத்தேர்தல் என்பது அந்த தொகுதி எம்எல்ஏ இறந்துவிட்டால் மட்டுமே நடப்பது வழக்கம். ஆனால் 10 நாட்களில் கட்சி மாறித் தாவிய எம்எல்ஏக்களால் மீண்டும் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. அதாவது இது திணிக்கப்பட்ட ஒரு இடைத்தேர்தல் என்பதும் அதே வேட்பாளர்கள் மீண்டும் களத்தில் இருப்பதும் விசித்திரமாக உள்ளது.
இந்த நிலையில் அதிமுக வேட்பாளராக கடந்த முறை இருந்த சத்யபாமா, இந்த முறை தவெக வேட்பாளராக தாராபுரம் தொகுதி மக்களை சந்தித்து வருகிறார். அவருக்கு தொகுதி மக்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. துரோகியே திரும்பிப் போ என்று ஆவேசமாக கூச்சலிட்டு மக்கள் அவரை திருப்பி விரட்டியடிக்கின்றனர். வராதே, எங்க ஓட்டுக்கு உனக்கு இந்த முறை இல்லே என்றும் ஆவேசமாக கூறி அவரை விரட்டுகின்றனர்.
அதிமுகவில் இருந்து தவெகவுக்கு சென்ற சத்யபாமாவுக்கு எதிர்ப்பு அலை அதிகரித்துள்ள நிலையில் தாராபுரம் தொகுதியில் தவெக வெற்றிக்கு வாய்ப்பில்லை என்று உளவுத்துறை தகவலும் வெளியாகி உள்ளது. தவெக ஆட்சி மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ள நிலையில் இந்த தொகுதியில் திமுக அல்லது அதிமுக வெற்றி உறுதி என்றும் சொல்லப்படுகிறது.
இப்படிப்பட்ட நெருக்கடியான சூழலில் தவெக தலைவர் விஜய் 2 நாட்கள் இங்கு தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளதாக ஒரு தகவல் வெளியானது. ஆனால் இந்த முறை மக்களை பிரசாரத்தில் விஜய் சந்திக்க வந்தால்வரவேற்போ ஆராவாரமோ இருக்காது. எனினும் செட்டப் கூட்டத்தை வைத்து ஒரு டிராமா செய்வார்கள். ரீல்ஸ் போட்டு மக்களை ஏமாற்றுவார்கள். ஆனால் தாராபுரம் தொகுதி மக்கள் இந்த முறை ஏமாற வாய்ப்பில்லை. தவெகவுக்கு பாடம் புகட்ட தயாராக இருக்கிறார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.





