தனுஷ் நடித்துள்ள “கேப்டன் மில்லர்” திரைப்படம் வருகிற தீபாவளி அன்று திரைக்கு வர உள்ளது. இத்திரைப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். இதில் தனுஷிற்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் தனுஷ் இடம்பெறும் காட்சிகள் அனைத்தும் படமாக்கபட்டு விட்டது. இதனை தொடர்ந்து தனுஷ் தற்போது தனது 50 ஆவது திரைப்படத்தில் நடித்து அதை இயக்கியும் வருகிறார்.

இந்த நிலையில் ஒரு பிரபல வில்லன் நடிகருக்கு “கேப்டன் மில்லர்” திரைப்படத்தில் ஒரு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. “வேட்டையாடு விளையாடு”, “பொல்லாதவன்” ஆகிய திரைப்படங்களின் மூலம் ஒரு டெரர் வில்லனாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் டேனியல் பாலாஜி. இவர் அதனை தொடர்ந்து தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் கூட “அரியவன்” திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் தற்போது இவரை குறித்து ஒரு தகவல் வெளிவந்துள்ளது.

அதாவது தனுஷின் “கேப்டன் மில்லர்” திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்திற்கு ஒப்பந்தம் செய்திருந்தார்களாம். அதற்கான கால்ஷீட்டையும் கொடுத்திருக்கிறார். ஆனால் இதுவரை டேனியல் பாலாஜியை படப்பிடிப்பிற்கு அழைக்கவே இல்லையாம். இதனால் கடுப்பான டேனியல் பாலாஜி “கேப்டன் மில்லர்” திரைப்படத்தில் இருந்து விலகிவிட்டாராம். இப்படி ஒரு தகவல் இணையத்தில் உலா வருகிறது.
டேனியல் பாலாஜி மிகச் சிறந்த வில்லன் நடிகர் என்பதை ரசிகர்கள் பலரும் அறிந்திருப்பார்கள். ஆஜானுபாகுவான உருவம் இல்லாமலே தனது நடிப்பின் மூலம் வில்லத்தனத்தை வெளிப்படுத்தி அசரவைக்கும் திறன் படைத்தவர் டேனியல் பாலாஜி என்பது குறிப்பிடத்தக்கது.





