தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுவர் நடிகர் நயன்தாரா. இயக்குனர் ஹரி இயக்கத்தில் ஐயா படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானார். பிறகு முன்னணி ஹீரோக்களில் வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறினார்.
நானும் ரவுடிதான் என்ற படத்தில் நடித்த போது, அந்த படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். உயிர், உலக் என்ற 2 குழந்தைகளை வாடகைத்தாய் மூலம் பெற்றெடுத்து நயன்தாரா, தன் பிள்ளைகளாக வளர்த்து வருகிறார். அடிக்கடி நயன்தாரா, விக்னேஷ் சிவன் விமர்சனங்களில், சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வது வழக்கமாக உள்ளது.
இதில் பல நேரங்களில் நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் என்பதாலேயே அவரும் பெயரும் சர்ச்சையில் சிக்கி விடுகிறது. இதுகுறித்து சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற நடிகை நயன்தாரா கூறியதாவது, நானும் விக்னேஷ் சிவனும் வாழ்க்கையில் சேராமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நான் அவ்வப்போது நினைத்துக் கொள்வேன். இப்போதும் நான் குற்ற உணர்ச்சியில் தான் இருக்கிறேன்.
ஏனெனில் அவரை இந்த உறவுக்குள் இழுத்தது நான்தான். அவரது வாழ்க்கையில் நான் இல்லாமல் இருந்திருந்தால், அவருக்கு என்று தனியாக ஒரு பெயர் இருந்திருக்கும். டைரக்டர் பாடலாசிரியர் என அனைத்திலும் ஒரு அடையாளம் அவருக்கு இருந்திருக்கும்.
விக்னேஷ் சிவன் ரொம்பவும் நல்ல மனிதர். அவரைப் போல் ஒருவர் இருக்க முடியுமா என்று என்னிடம் கேட்டால் அது எனக்குத் தெரியவில்லை. ஒருவர் மீது இருக்கும் அன்பும் மரியாதையும் அவர்கள் சந்திக்கும் நெகட்டிவ் விஷயங்களால் காணாமல் போய்விடுகிறது.
தனக்கு சமமாக இருப்பவர்களை திருமணம் செய்ய வேண்டும் என்றுதான் பலரும் நினைக்கிறார்கள். ஆடம்பரத்தையோ வெற்றியையோ நினைத்து நாங்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை. என்னையும் அவரையும் ஒப்பிட்டு பேசுவதில் நியாயமே இல்லை என்று நடிகை நயன்தாரா அந்த நேர்காணலில் ஆதங்கமாக கூறியிருக்கிறார். இது தற்போது வைரலாகி வருகிறது.





