- Advertisement -
Homeபொழுதுபோக்குஇயக்குனராக களமிறங்கிய தயாரிப்பாளர்... அதர்வாவை வைத்து அவர் இயக்கும் திரைப்படத்திற்கு இப்படி ஒரு பெயரா... தந்தையின்...

இயக்குனராக களமிறங்கிய தயாரிப்பாளர்… அதர்வாவை வைத்து அவர் இயக்கும் திரைப்படத்திற்கு இப்படி ஒரு பெயரா… தந்தையின் சூப்பர் ஹிட் படத்தை டைட்டிலோடு தூக்கிய மகன்…

- Advertisement -

தமிழ் சினிமாவில் தற்போது dawn பிக்சர்ஸ் நிறுவனம் முக்கியமான திரைப்படங்களை தயாரித்து வருகிறது. இதன் நிறுவனர் ஆகாஷ் பாஸ்கரன், நல்ல கதைகளை தேர்வு செய்து அதனை தயாரித்து வருகிறார். தற்போது அவர், தனுசை வைத்து இட்லி கடை படத்தை எடுத்து வருகிறார். இந்த திரைப்படத்தில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் இயக்கியும் வருகிறார் தனுஷ்.

இதில் நித்தியா மேனன் ராஜ்கிரன் அருண் விஜய் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஷூட்டிங் பணிகள் இன்னும் நிறைவடையாமல் இருப்பதால், இட்லி கடையின் ரிலீஸ் தேதி தள்ளிப் போகும் என்று கூறப்படுகிறது.

இட்லி கடையை தொடர்ந்து பராசக்தி திரைப்படத்தையும் தயாரித்து வருகிறார் ஆகாஷ் பாஸ்கரன். சிவகார்த்திகேயன் சுதா கொங்கரா கூட்டணியில் உருவாகும் இந்த திரைப்படத்தில், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீ லீலா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். 1965 ஆம் காலகட்டங்களில் இதன் கதை நடப்பது போல் படமாக்கப்பட்டு வருகிறது.

தற்போது சிதம்பரத்தில் இதன் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுபோக சிம்பு நடிக்க இருக்கும் 49வது திரைப்படத்தையும், ஆகாஷ் பாஸ்கரனின் dawn பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரிக்கிறது. பார்க்கிங் திரைப்படத்தை எடுத்து பலரையும் ஆச்சரியப்படுத்திய இயக்குனர் தான், இந்த திரைப்படத்தை உருவாக்க இருக்கிறார்.

இப்படி முக்கியமான திரைப்படங்களின் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் ஆகாஷ் பாஸ்கரன், அடுத்ததாக இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். அதர்வாவை வைத்து அவர் புதிய படத்தை இயக்குகிறார். இதற்கு இதயம் முரளி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. அதர்வாவின் தந்தையும் நடிகருமான முரளிக்கு சூப்பர் டூப்பர் வெற்றியை கொடுத்த இதயம் திரைப்படத்தின் டைட்டிலோடு சேர்த்து தான் இதன் பெயரை வைத்திருக்கிறார்கள்.

தமன் இசையமைக்கும் இந்த திரைப்படத்தின் டைட்டில் வீடியோ, ஐந்து நிமிடங்களுக்கு மேல் ஓடுகிறது. அதில் அதர்வாவுடன் இசையமைப்பாளர் தமன், தனியார் டிவி தொகுப்பாளர் ரக்சன், ஏஞ்சல் உள்ளிட்டோர் வருகிறார்கள். 2012 ஆம் காலகட்டத்தையும், தற்போதைய ஆண்டையும் டீசரில் காட்டுகிறார்கள். வரும் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சற்று முன்