- Advertisement -
Homeபொழுதுபோக்குஷங்கர் இயக்கத்தில் வெளியான கேம் சேஞ்சர் திரைப்படம் - 5 நாட்களில் வசூல் இவ்வளவுதானா? ஏம்பா...

ஷங்கர் இயக்கத்தில் வெளியான கேம் சேஞ்சர் திரைப்படம் – 5 நாட்களில் வசூல் இவ்வளவுதானா? ஏம்பா புஷ்பா 2 ரேஞ்சுக்கு பில்டப் செஞ்சாங்களே…

- Advertisement -

இயக்குனர் ஷங்கர் தமிழ் சினிமாவில் கொண்டாடப்படும் ஒரு இயக்குனராக உள்ளார். அவர் இயக்கிய ஜெண்டில் மேன் முதல் இந்தியன் 2 வரை தமிழ் படங்களில் மிகவும் மோசமான தோல்வியை தந்த படம் இந்தியன் 2 மட்டும்தான். மற்றபடி ஷங்கர் இயக்கத்தில் வெளியான பல படங்கள் பெரிய அளவில் வெற்றிவாகை சூடி இருக்கின்றன.

இந்தியன் 2 தோல்வியை அடுத்து வர உள்ள இந்தியன் 3 ஈடுகட்டும் விதமான அந்த படத்தை மிக சிறப்பாக தர நடிகர் கமல்ஹாசனும், இயக்குனர் ஷங்கரும் திட்டமிட்டுள்ள நிலையில், அமெரிக்காவில் உள்ள கமல் தமிழ்நாடு திரும்பியதும் இந்தியன் 3 படப்பிடிப்பில் கலந்துக்கொள்கிறார். அதன் பிறகுதான் தனது 237 படத்தை துவங்க இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

இந்த சூழலில் தெலுங்கு நடிகர் ராம்சரண் நடிப்பில் தில் ராஜூ தயாரிப்பில் கேம் சேஞ்சர் என்ற படம் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 10ம் தேதி வெளியானது. இந்த படம் ஆர்ஆர்ஆர் படத்துக்கு பிறகு 3 ஆண்டுகள் கழித்து வெளியான ராம்சரணின் படமாகும். அதனால் ரசிகர்கள் மத்தியில் பெரிய ஆர்வம் காணப்பட்டது.

கேம் சேஞ்சர் படத்தில் ராம்சரண், பாலிவுட் நடிகை கியாரா அத்வானி, அஞ்சலி சமுத்திரக்கனி எஸ்ஜே சூர்யா நடித்திருந்த நிலையில், தமன் இசையமைத்து இருந்தார். இந்த படத்துக்கான பிரமோசன் பல இடங்களில் பரபரப்பாக நடத்தப்பட்டது. படம் புஷ்பா 2 அளவுக்கு பிளாக் பஸ்டர் ஹிட் தரும் என்றும் பேசப்ப்பட்டது.

- Advertisement -

ஆனால் கடந்த 10ம் தேதி வெளியான கேம் சேஞ்சர் படம் முதல் நாளில் 80 கோடி ரூபாய், 2வது நாளில் 45 கோடி ரூபாய் என மொத்தம் 125 கோடி ரூபாய் மட்டுமே 2 நாட்களில் வசூலித்தது. இப்போது தொடர்ந்து 3 நாட்களில் 55 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளது. படம் ரிலீஸான 5 நாட்களில் மொத்தம் 180 கோடி ரூபாய் மட்டுமே உலகளவில் வசூலித்திருக்கிறது.

ஆனால் புஷ்பா 2 படம் ரிலீஸான முதல் நாளிலேயே உலகளவில் மொத்தம் 275 கோடி ரூபாய் வசூலித்தது. 7 நாட்களில் 1006 கோடி ரூபாய் வசூலித்தது. தற்போது 1900 கோடி ரூபாயை வசூலில் நெருங்கிக்கொண்டிருக்கிறது. கேம் சேஞ்சர் படம் பலத்த நஷ்டத்தை தவிர்க்க பிரேக் ஈவன் செய்யவே ரூ. 450 கோடி வசூலை கடக்க வேண்டும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்