- Advertisement -
Homeபொழுதுபோக்குவிடாமுயற்சியில் அஜித்துக்கு வில்லனாகும் பிக் பாஸ் பிரபலம்... அய்யய்யோ என்னத்த கிண்டிட்டு இருக்காங்கன்னு தெரியலையே என...

விடாமுயற்சியில் அஜித்துக்கு வில்லனாகும் பிக் பாஸ் பிரபலம்… அய்யய்யோ என்னத்த கிண்டிட்டு இருக்காங்கன்னு தெரியலையே என பரிதவிக்கும் ரசிகர்கள்…

- Advertisement -

துணிவு திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் அடுத்ததாக மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிக்கிறார். முதலில் இந்த படத்தை விக்னேஷ் சிவன் எடுப்பதாகத் தான் இருந்தது. ஆனால் தயாரிப்பு நிறுவனமான லைக்காவுடன், விக்னேஷ் சிவன் உரசி கொண்டதால் அந்தப் படத்தில் இருந்து வெளியேறினார்.

தற்போது அவர் கமல்ஹாசன் தயாரிப்பில் எல் ஐ சி என்னும் படத்தை இயக்கியிருக்கிறார். கதாநாயகனாக லவ் டுடே பட இயக்குனர் பிரதி ரங்கநாதன் நடிக்கிறார். இது ஒரு பக்கம் இருக்க, அஜித் மகிழ்திருமேனி கூட்டணியில் உருவாகும் திரைப்படத்திற்கு விடா முயற்சி என பெயர் வைக்கப்பட்டது.

- Advertisement -

மே ஒன்றாம் தேதி அஜித் பிறந்த நாளை ஒட்டி இதன் அறிவிப்பு வெளியானது. விடாமுயற்சியின் எழுத்து வடிவத்தில், இணையத்தில் லொகேஷனை காட்டும் குறியீடு இருந்தது. இதனால் நிச்சயம் இந்த திரைப்படம் க்ரைம் திரளாகத்தான் இருக்கும் என்று பலர் யூகித்தனர். அதுமட்டுமில்லாமல் படத்தின் அடுத்த கட்ட அப்டேட்டுகளுக்காகவும் ரசிகர்கள் காத்திருந்தனர்.

ஆனால் எதிர்பார்த்தபடி எந்த ஒரு அறிவிப்புமே வெளியாகவில்லை. அஜித் ஒரு பக்கம் பைக்கை தூக்கிக்கொண்டு வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள, மகிழ் திருமேனி தனது கதையை படிப்படியாக செதுக்கிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் தயாரிப்பு நிறுவனம் இயக்குனர் என எல்லா பக்கமும் ரெடி ஆனாலும், பைக்கில் ஓடிப்போன அஜித்தை மட்டும் பிடிக்கவே முடியவில்லை.

- Advertisement -

வலிமை திரைப்படம் ஆவது சூட்டிங்கு பிறகு என் ஆனது என்று தான் கேட்டு வந்தோம், ஆனால் இந்த படம் ஆரம்பிப்பதற்கு முன்னாலே என்ன ஆகிறது என்று கேட்க வைத்து விட்டார்களே என்று ஏகே ரசிகர்கள் புலம்ப ஆரம்பித்தனர். ஒரு கட்டத்தில் விடாமுயற்சி கைவிடப்படுவதாக தகவல் எழுந்த நிலையில், அதை தயாரிப்பு நிறுவனம் முற்றிலும் மறுத்தது. மேலும் இதில் கதாநாயகியாக த்ரிஷா நடிப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

இந்த மாத இறுதிக்குள் துபாயில் சூட்டிங் தொடங்க இருக்கும் நிலையில், படத்தின் முக்கிய வில்லனாக சஞ்சய் தத் இருக்கப் போவதாக கூறப்பட்டது. துணை வில்லன் கதாபாத்திரத்திற்கு அர்ஜுன் தாஸையும் படக்குழு தேர்ந்தெடுத்ததாம். ஆனால் தற்போது கடைசி கட்ட நேரத்தில் அர்ஜுன் தாஸ் படத்தில் இடம்பெறவில்லை என்றும், அவருக்கு பதில் பிக் பாஸ் போட்டியில் வெற்றியாளரான, ஆரவ்வை மகிழ்திருமேனி தேர்வு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே மகிழ் திருமேனி உதயநிதி கூட்டணியில் உருவான கலகத் தலைவன் திரைப்படத்தில், ஆரவ் வில்லனாக நடித்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்