- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் ரவிமோகனுக்கு சொந்தமான ஈசிஆர் பங்களாவை ஜப்தி செய்ய வங்கி நடவடிக்கை - அதிரடி பதிவை...

நடிகர் ரவிமோகனுக்கு சொந்தமான ஈசிஆர் பங்களாவை ஜப்தி செய்ய வங்கி நடவடிக்கை – அதிரடி பதிவை வெளியிட்டு ஆவேசப்பட்ட ஆர்த்தி ரவி!

- Advertisement -

நடிகர் ரவி மோகன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். பல வெற்றிப் படங்களை கொடுத்த அவர் சமீபத்தில்தான் ஜெயம் ரவி என்ற தனது பெயரை ரவி மோகன் என மாற்றிக்கொண்டார். காதலித்து திருமணம் செய்த மனைவி ஆர்த்தியை கடந்தாண்டில் பிரிவதாக நடிகர் ரவி மோகன் அறிவித்தார்.

மேலும் ஆர்த்தியுடன் செய்துக்கொண்ட திருமணத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, நடிகர் ரவிமோகன் சென்னையில் உள்ள முதன்மை குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு மனுதாக்கலும் செய்திருக்கிறார். அந்த வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது. இதற்கிடையே பாடகி கெனிஷாவுடன் நடிகர் ரவிமோகன் நெருக்கமான நட்பில் இருந்து வருகிறார்.

- Advertisement -

இதற்கிடையே பாபி டச் கோல்டு யுனிவர்சல் என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் 2 படங்களில் நடிக்க நடிகர் ரவி மோகன் கமிட் செய்யப்பட்டார். இதற்காக ரூ. 12 கோடி சம்பளம் பேசப்பட்டு, ரூ. 6 கோடி அட்வான்ஸ்சும் வாங்கி விட்டார். ஆனால் ஒப்புக்கொண்டபடி அந்த நிறுவன தயாரிப்பின் படத்தில் நடிகர் ரவிமோகன் நடிக்காமல் டிமிக்கி கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் அட்வான்ஸ்சாக கொடுத்த ரூ. 6 கோடியை தயாரிப்பு நிறுவனம் பலமுறை திருப்பிக் கேட்டும், நடிகர் ரவிமோகன் தரவில்லை. அதனால் அந்த தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதற்காக நடிகர் ரவி மோகன் தனது சொத்து ஆவணங்களை தாக்க செய்ய கோர்ட் உத்தரவிட்டது. ஆனால் அந்த உத்தரவை நடிகர் ரவி மோகன் அலட்சியப்படுத்தி விட்டார்.

- Advertisement -

இதையடுத்து, அந்த தயாரிப்பு நிறுவனம் வைத்த கோரிக்கையை ஏற்று, நடிகர் ரவிமோகனின் சொத்துகளை முடக்கும் மனுவை தாக்கல் செய்ய கோர்ட் அனுமதி வழங்கி விட்டது. இதனால் எந்நேரமும் நடிகர் ரவிமோகனின் சொத்துகளை முடக்கும் ஆபத்து உள்ளது. அதே நேரத்தில் இப்போது அவரது பங்களாவை ஜப்தி செய்யும் வங்கி நடவடிக்கையும் துவங்கியுள்ளது.

சென்னை ஈசிஆரில் நடிகர் ரவிமோகனுக்கு சொந்தமான பங்களாக உள்ளது. 10 மாதங்களாக வங்கிக்கு இஎம்ஐ தவணை கட்டாததால், அந்த பங்களாவை ஜப்தி செய்ய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது. இதுகுறித்து நடிகர் ரவிமோகனின் மனைவி ஆர்த்தி ரவி தனது வலைதள பக்கத்தில் வைத்துள்ள ஸ்டோரி ஒன்றில், கடவுளை ஏமாற்ற முடியாது. மற்றவர்களை ஏமாற்றலாம். உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளலாம். ஆனால் கடவுளை ஏமாற்ற முடியாது என்று அந்த பதிவில் தனது கணவரை மறைமுகமாக சுட்டிக்காட்டி ஆர்த்தி ரவி கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்