- Advertisement -
Homeபொழுதுபோக்குமுதல்வர் விஜய்க்கு வாழ்த்துகள் தெரிவித்த நடிகர் அஜீத்குமார் - இந்தியாவில் இது ஒரு மிகப்பெரிய பாய்ச்சல்...

முதல்வர் விஜய்க்கு வாழ்த்துகள் தெரிவித்த நடிகர் அஜீத்குமார் – இந்தியாவில் இது ஒரு மிகப்பெரிய பாய்ச்சல் என்றும் பாராட்டு!

- Advertisement -

தமிழ் சினிமாவில் எம்ஜிஆர் சிவாஜி போல் ரஜினி கமல் போல் ஒரு காலகட்டத்தில் விஜய் அஜீத் குமார் போட்டியாளர்களாக கருதப்பட்டனர். எனினும் சினிமாத்துறையை விட்டு விலகி நடிகர் விஜய் முழு நேர அரசியல்வாதியாகி தற்போது தமிழக முதல்வராக இருந்து வருகிறார்.

அதேபோல் நடிகர் அஜீத்குமார் திரைப்படங்களில் நடித்தாலும் அதைவிட அதிக ஆர்வத்துடன் விளையாட்டு துறையில் குறிப்பாக கார் ரேஸ் பைக் ரேஸ் போன்றவற்றில் ஈடுபட்டு வருகிறார். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக படப்பிடிப்பில் கலந்துக்கொள்ளாமல் கார் ரேஸ்களில் தொடர்ந்து அஜீத்குமார் பங்கேற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சட்டசபையில் நேற்று 110 வது விதியின் கீழ் அறிவிப்பு ஒன்றை முதல்வர் விஜய் வெளியிட்டார். தமிழகத்தில் உலக அளவிலான கார் பந்தய விளையாட்டுப் போட்டிகளுக்கான கார் உற்பத்தி ஆலைகளையும் அதற்கு தேவையான உப தொழிற்சாலைகளையும் அமைக்க தேவையான சூழல் உள்ளது.

உலகத்தரம் வாய்ந்த மோட்டார் வாகன கார் பந்தய அரங்குகளை அமைப்பதன் மூலம் சுற்றுலா சிறப்பு வாகன உற்பத்தி தொழிற்சாலைகள் வேலைவாய்ப்பு பொருளாதாரம் மேம்பட வாய்ப்புகள் உள்ளன. விளையாட்டு சுற்றுலாவை மேம்படுத்தவும் தமிழக இளைஞர்களிடையே மோட்டார் ஸ்போர்ட்ஸ் மீதான ஆர்வத்தை ஊக்குவித்து பயிற்சிகள் வழங்கவும் புதிய மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் உருவாக்கப்படும்.

இந்த நகரத்தில் சர்வதேச தரத்திலான மோட்டார் ஸ்போர்ட்ஸ் பந்தயத் தடம் அதற்கான நவீன உள்கட்டமைப்பு வசதிகள் பயிற்சிகள் ஏற்படுத்தப்பட்டு ஃபார்முலா 1 முதல் ஃபார்முலா 4 வரையிலான சர்வதேச போட்டிகள் நடத்த கட்டமைப்புகள் உருவாக்கப்படும் என்று முதல்வர் விஜய் நேற்று அறிவித்தார். இந்த நிலையில் தொடர்ந்து கார் ரேஸ்சில் ஈடுபட்டு வரும் நடிகர் அஜீத்குமார் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது, மோட்டார் பந்தயம் உள்ளிட்ட அனைத்து விளையாட்டுத்துறைகளுக்கும் மிகவும் தேவையான கவனத்தை அளித்ததற்காக முதல்வர் விஜய்க்கு என் மனமார்ந்த நன்றி. தற்போது மோட்டார் பந்தயத்தில் ஈடுபட்டுள்ள நான், விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங்கின் ஒரு மேற்கோளை மீண்டும் கூற விரும்புகிறேன். தமிழக அரசின் ஒரு சிறிய அடி இந்தியாவில் மோட்டார் பந்தயத்திற்கு ஒரு மாபெரும் பாய்ச்சல். விஜயின் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெற வாழ்த்துகள் என்று நடிகர் அஜீத்குமார் அந்த அறிக்கையில் கூறியிருக்கிறார்.

சற்று முன்