தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் அஜீத்குமார். விடாமுயற்சி படத்தை தொடர்ந்து தற்போது அவர் குட் பேட் அக்லி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை மார்க் ஆண்டனி பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் டைரக்ட் செய்து வருகிறார். இந்த படத்தில் ஜோடியாக திரிஷா நடிக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ஸ்பெயின் நாட்டில் துவங்கி, ஒரு வாரமாக நடந்து வருகிறது. இந்த படத்தின் சூட்டிங் ஸ்பெயின் நாட்டில் 50 நாட்கள் நடக்க திட்டமிடப்பட்டுள்ளது. நடிகர் அஜீத்குமார் நடிப்பில் மட்டுமின்றி மோட்டார் ஸ்போர்ட்ஸ் ஆர்வலராகவும் இருக்கிறார். 2 மாதங்களுக்கு முன்பு தனது தொழில்முறை ரேஸிங் டீமை அறிமுகம் செய்தார்.
கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பாக அவரது சுற்றுலா நிறுவனமான வீனஸ் மோட்டார் சைக்கிள் டூர்ஸ் நிறுவப்பட்டது. இந்த நிறுவனம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் இதுவரை இல்லாத மிகப்பெரிய ஹார்வி – டேவிட்சன் மோட்டார் சைக்கிள் ரைடு ஏற்பாடு செய்ததற்காக மதிப்புமிக்க உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.
ஐலேண்ட் ரம்பிள் என்று அழைக்கப்படும் இந்த வரலாற்று நிகழ்வில் ஹார்வி – டேவிட்சன் மோட்டார் சைக்கிள்கள், தீவுகளில் பயணித்தது அனைவரையும் வெகுவாக ஈர்த்தது. இந்தியா, ஸ்காட்லாந்து, போர்ச்சுக்கல், வியட்நாம், தாய்லாந்து, அரேபியன், ஒடிஸி ( யுஏஇ ஓமன்) பெஸ்ட் ஆப் ஆல்ப்ஸ் ( ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா, இத்தாலி) போன்ற சிலிர்ப்பான நாடு கடந்த பயணங்களையும் அஜீத்தின் வீனஸ் மோட்டார் சைக்கிள் டூர்ஸ் வழி நடத்தியுள்ளது.
ஒவ்வொரு பயணமும் கவனத்துடன் திட்டமிடப்பட்டுள்ளது. பயணத்தில் இயற்கை காட்சிகள் மற்றும் இதுவரை பார்க்காத இடங்கள் என இரண்டிலுமே சிறந்த அனுபவத்தை பெற உறுதி செய்தது. மோட்டார் சைக்கிள் பயணம் மட்டுமல்லாமல் கூடுதலாக கார் மற்றும் சைக்கிள் பயணங்களுடன் மோட்டார் வீனஸ் மோட்டார் சைக்கிள் டூர்ஸ் ஒவ்வொரு வகையான பயணிகளுக்கும் ஒரு சாகத்தை உறுதி செய்கிறது.
அந்தமானில் ரம்பிள் தீவில் ஹார்வி- டேவிட்சன் நிகழ்வில் அஜித்குமாரின் வீனஸ் மோட்டார் சைக்கிள் டூர்ஸ் நிறுவனத்தின் இந்த சமீபத்திய முயற்சி சாதனை படைத்தது. அதற்காக உலக சாதனை புத்தகத்தில் அஜீத்குமாரின் சொந்த நிறுவனம் இடம்பெற்றுள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் பலத்த உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த தகவலை அஜீத்குமார் ரசிகர்கள் தொடர்ந்து பகிர்ந்து, சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.





