நடிகர் அஜீத்குமார் நடிப்பில் 2025ம் ஆண்டில் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என 2 படங்கள் வெளியாகின. இதில் விடாமுயற்சி படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் படுதோல்வியை சந்தித்தது. ஆனால் குட் பேட் அக்லி படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. வணிக ரீதியாகவும் கணிசமான லாபத்தை தந்தது.
இதையடுத்து குட் பேட் அக்லி படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரனுக்கே தனது அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பையும் அஜீத்குமார் தந்து விட்டார். கடந்த 8 மாதங்களாக வெளிநாடுகளில் நடந்து வரும் கார் ரேஸில் தொடர்ந்து பங்கேற்று வரும் அஜீத்குமார் வரும் நவம்பரில் தனது 64வது படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்க உள்ளார்.
நடிகர் அஜீத்குமார் தனது 64வது படத்தில் நடித்த தனக்கு சம்பளமாக ரூ. 186 கோடி கேட்கிறார். அவர் முன்னதாக 163 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது. இப்போது 23 கோடி ரூபாய் சம்பளத்தை உயர்த்தியிருப்பதாக தெரிய வருகிறது. இந்த சம்பளம்தான் வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார்.
ஆனால் அஜீத்குமார் நடித்த படங்கள் அந்தளவுக்கு வசூலில் இறங்கி அடிப்பதில்லை. நடிகர் விஜய் படங்கள் போல வணிகரீதியாக பெரிய வசூலை அஜீத் படங்கள் தருவதில்லை. ஆனாலும் அவர் அதிக சம்பளம் எதிர்பார்க்கிறார். அதனால் இந்த படத்தை தயாரிப்பதாக இந்த ரோமியோ பிக்சர்ஸ் ராகுலும் இப்போது பின்வாங்கி விட்டார்.
இதுவரை ஏகே 64 படத்தை தயாரிக்க 10க்கும் மேற்பட்ட முன்னணி தயாரிப்பு நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் அஜீத்குமாரின் அதிக சம்பளம் காரணமாகவே அந்த நிறுவனங்கள் ஏகே 64 படத்தை நிராகரித்து விட்டன. நடிகர் விஜய் நடித்த லியோ படத்தை தயாரித்த தயாரிப்பாளர் எஸ்எஸ் லலித்குமாரிடமும் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
ஏகே 64 படத்தை தயாரிக்க ஒப்புக்கொண்ட அவர் அஜீத்குமார் சம்பளத்தை மட்டும் ரூ. 125 கோடியாக இருந்தால் நானே தயாரிக்கிறேன் என்று கூறியிருக்கிறார். ஆனாலும் அஜீத்குமார் 186 கோடி ரூபாய் சம்பளம் என்றால் நடிக்கிறேன் என்று மீண்டும் உறுதியாக கூறியிருக்கிறார். கள நிலவரம் என்னவென்று தெரியாமல் அஜீத்குமார் இப்படி முரண்டு பிடிப்பது நியாயமா என்று தயாரிப்பாளர்கள் பலரும் புலம்புகின்றனர்.





