நடிகர்கள், பொது இடங்களுக்கு வரும்போதும் ஷூட்டிங் ஸ்பாட்டுகளில் சில நேரங்களில் ரசிகர்களின் தொல்லைகளுக்கு ஆளாகின்றனர். முன்பெல்லாம் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகைகளை தொந்தரவு ரசிகர்களை எம்ஜிஆர், விஜயகாந்த் போன்றவர்கள் மிரட்டி தாக்கி சம்பவங்கள் நடந்திருக்கிறது.
திரையில் பார்த்து பார்த்து ஏங்கிய முகங்களை, உருவங்களை நேரில் காணும் போது சில ரசிகர்கள் எல்லை மீறுகின்றனர். வரம்பு மீறி அவர்களின் ஆடைகளை பிடித்து இழுப்பது, கிள்ளுவது, கட்டிப் பிடிப்பது, முத்தம் கொடுப்பது போன்ற அத்துமீறல்களில் ஈடுபடுவது அடிக்கடி நடந்து வருகிறது.
அதனால்தான் சமீபகாலமாக பவுன்சர்கள் என்ற பெயரில் கட்டுமஸ்தான பாடி பில்டர்கள் 10 முதல் 20 பேரை அழைத்துக்கொண்டு பிரபல நடிகர், நடிகைகள் பொது நிகழ்வுகளுக்கு வருகின்றனர். ஷூட்டிங் ஸ்பாட்டுகளிலும் அந்த பவுன்சர்களை தங்களுக்கு பாதுகாப்பு வைத்துக்கொள்கின்றனர். இதில் கொடுமை என்னவென்றால், ஷூட்டிங்குக்கு வரும் பவுன்சர்களுக்கு சம்பளம், தயாரிப்பாளர்கள்தான் கொடுக்க வேண்டி இருக்கிறது.
அதிலும் நடிகர்கள் ரஜினி, கமல், விஜய், அஜீத்குமார் நடிக்கும் படப்பிடிப்பு தளங்களில் ரசிகர்களின் தொல்லை மிக அதிகமாக இருக்கும். அதனால் அவர்களை 500 மீட்டர் தூரத்துக்கு முன்பே, ஷூட்டிங் ஸ்பாட்டுக்குள் வர விடாமல் தடுத்து, தடுப்புகளை அடைத்து விடுவது வழக்கமாக உள்ளது. பாதுகாவலர்களும் அவர்களை நுழைய விடாமல் பார்த்துக்கொள்வர்.
இந்நிலையில், ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த ஒரு சம்பவத்தில், ஒரு ரசிகரை நடிகர் அஜீத்குமார் அருகில் அழைத்து ஓங்கி கன்னத்தில் பளார் என்ற சம்பவம் அரங்கேறி உள்ளது. இதுகுறித்து பிரபல காமெடி நடிகை ஆர்த்தி, ஒரு நேர்காணலில் கூறியதாவது, ஷூட்டிங் ஸ்பாட்டில் அஜீத்குமார் நடித்துக்கொண்டு இருந்தார். அப்போது தலையில் அஜீத் என பச்சை குத்தியிருந்த ஒருவர், தல தல என ஓயாமல் கத்திக்கொண்டே இருந்தார்.
அதைப் பார்த்த அஜீத்குமார், அந்த ரசிகரை அருகில் அழைத்து ஓங்கி கன்னத்தில் அறைந்தார். பிறகு பணம் கொடுத்து போய் மொட்டை அடித்துக்கொண்டு வா என்றார். பின்பு அந்த ரசிகர் மொட்டை அடித்துக்கொண்டு வந்த பின், அவருடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்ட அஜீத்குமார், இனி இப்படி செய்யக்கூடாது, அன்பு மனதில் இருந்தால் போதும், என்று சொல்லி அவரை அனுப்பி வைத்தார், என்று கூறியிருக்கிறார் நடிகை ஆர்த்தி.





