திரைப்பட பின்னணி பாடகி ஸ்வாகதா. இவர் பிக்பாஸ் பிரபலம் மாயாவின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது. சில மாணவர்களுக்கு முன்பு ஒரு நேர்காணலில் ஸ்வாகதா பேசி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். தமிழ் சினிமா இசையமைப்பாளர் ஒருவர் மீது பெயர் குறிப்பிடாமல் பாலியல் குற்றச்சாட்டை அவர் கூறியிருந்தார்.
அவர் தன்னை ரெகார்டிங் அறையில் வைத்து பாலியல் கொடுமை செய்ததாகவும் அவர் இந்தியாவின் எப்ஸ்டீன் அதாவது சிறுமிகளை வைத்து பாலியல் தொழில் நடத்திய அமெரிக்கர் என்றும் அவர் குற்றம் சாட்டியிருந்தார். அவரது பெயரை சொல்லும்படி பலர் கேட்டபோதும் மான நஷ்ட வழக்குக்கு ஆகும் செலவை யாராவது ஏற்றுக் கொள்ள முன்வந்தால் அவரது பெயரை வெளியிடுவதாகவும் பாடகி ஸ்வாகதா கூறியிருந்தார்.
தனது குற்றச்சாட்டில் ஜீவி பிரகாஷ் ஜிப்ரான் அனிருத் ஆகியோர் இல்லை என்றும் அவர் தெளிவாக கூறியிருந்தார். ஏனெனில் தமிழில் பிரபல இசையமைப்பாளராக உள்ள அவர்கள் பெயர்களை சிலர் யூகமாக சொன்னதால், அவர்களில் யாரும் இல்லை என்பதை பாடகி ஸ்வாகதா தெளிவுபடுத்தி இருந்தார்.
ஒரு பிரபல இசையமைப்பாளரின் ஸ்டூடியோவில் சில ஆண்டுகள் ஸ்வாகதா பணி செய்து இருக்கிறார். அவருடைய உதவியாளர் போலவும் இருந்திருக்கிறார். அவரது இசையமைப்பில் தான் பல பாடல்களை அதிகமாக ஸ்வாகதா பாடியிருக்கிறார். அதனால் அவர் குற்றம் சாட்டிய இசையமைப்பாளர் இவர்தான் என்று நெட்டிசன்கள் கணித்து ஒருவர் பெயரை குறிப்பிட்டு எழுதி வந்தனர்.
சமீபகாலமாக அமைதியாக இருந்த ஸ்வாகதா, இப்போது இன்ஸ்டா ஸ்டோரியில் இதுகுறித்து எழுதி இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது, நிறைய சொல்ல வேண்டும் என்று தோணுது. ஆனால் ஒரு பிரியாணிக்கு உண்மையும் மீடியாவும் விலை போகும் என்று நினைத்தான் பாருங்க. இந்த ஆளு. சிரிப்பு சிரிப்பா வருது. நீ பண்ணு. இன்னும் என்னெல்லாம் பண்றேன்னு பாக்குறேன்.
உன்னுடைய ஒவ்வொரு செயல்பாட்டையும் கவனிக்கிறேன். இது நான் எதிர்பார்த்ததுதான். அடுத்து என்ன செய்யப் போறேன்னு எனக்கு தெரியும். பாத்துக்கலாம் மிஸ்டர். பிரதர் எனது பழிவாங்கலுக்கு தயாராக இரு என்று எழுதி இருக்கிறார். இதைவிட மிகவும் கடுமையான சில ஸ்டோரிகளையும் ஸ்வாகதா வெளியிட்டு இருப்பது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.





