ஏழையாகவும் நடுத்தர நிலையிலும் வாழும் ஏராளமான மக்களுக்கு உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைப்பதில்லை என்பதுதான் கசப்பான உண்மை. இதில் அத்வாசிய பொருட்களின் விலை உயர்வு அன்றாட தேவைக்கான விலைவாசி ஏற்றம் ஏழை எளிய மக்களை மிகப்பெரிய நெருக்கடியில் தள்ளி தினமும் வாழ்க்கையே போராட்டமாக மாறி வருகிறது.
ஆனால் சினிமாத் துறையை பொருத்த வரை ஓடாத மொக்கை படங்களில் நடித்து விட்டு பல பிளாப் படங்களை தொடர்ந்து தந்துவிட்டு சில ஹீரோக்கள் மட்டும் பல கோடி ரூபாய் சம்பளத்தை உயர்த்தி விடுகின்றனர். இப்படிப்பட்ட ஹீரோக்களால் தயாரிப்பாளர்கள் நூற்றுக்கணக்கான கோடிகளில் கடன்பட்டு வட்டி கட்ட முடியாமல் கடனாளியாகி தவிக்கின்றனர்.
கார் ரேஸில் மட்டுமே கவனம் செலுத்திய நடிகர் அஜீத்குமாரின் 64வது படத்தை தயாரிக்க எந்த தயாிப்பாளரும் முன்வரவில்லை. அவரது படங்கள் தியேட்டரிக்கல் நான் தியேட்டரிக்கல் மூலமாக 250 கோடி ரூபாய் கூட வியாபாரம் இல்லை என்ற நிலையில் அவர் சம்பளமாக கேட்பதே ரூ. 185 கோடி என்றதால் தயாரிப்பு நிறுவனங்கள் கண்டுகொள்ளவில்லை.
இந்த சூழலில் இப்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அவர் நடிக்கும் படத்துக்கு டேர் டெவில் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க உள்ளார். இந்த படத்தை ஷாலினி அஜீத்குமார் சொந்தமாக தயாரிக்கிறார். அதாவது மனைவி ஷாலினி பெயரில் அஜீத்குமாரே தயாரிப்பாளராக களத்தில் குதித்திருக்கிறார்.
இதுகுறித்து மூத்த சினிமா பத்திரிகையாளர் வலைப்பேச்சு அந்தணன் கூறியதாவது, சம்பளத்தை குறைக்காமல் அஜீத்குமார் போன்ற பல ஹீரோக்கள் தமிழ் சினிமாவில் இருக்கின்றனர். சினிமா பட தயாரிப்பாளர் சங்க கூட்டங்கள் நடக்கும் போது, இந்த ஹீரோக்கள் எல்லாம் தயாரிப்பாளர்கள் ஆனால்தான் எங்களது வலியும் சிரமங்களும் புரியும் என்று சில தயாரிப்பாளர்கள் சொல்வதுண்டு.
அந்த வகையில் நடிகர் அஜீத்குமாருக்கும் அவர் சொந்தமாக தயாரித்த படம் ரிலீஸ் ஆன பிறகு ஒரு தயாரிப்பாளராக அவருக்கும் படம் தயாரிப்பதில் வெளியிடுவதில் நடைமுறையில் என்னென்ன சிக்கல்கள் என்பது கண்டிப்பாக தெரிந்து விடும். அவர் மூலமாக மற்ற ஹீரோக்களுக்கும் அது புரிந்து விடும் என்று வலைப்பேச்சு அந்தணன் ஒரு வீடியோவில் கூறியிருக்கிறார்.





