- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் அஜீத்குமாருக்கு இப்படி ஒரு சென்டிமென்டா? - ஒருவேளை ரஜினிகாந்த் மாதிரி அஜீத் குமாரும்...

நடிகர் அஜீத்குமாருக்கு இப்படி ஒரு சென்டிமென்டா? – ஒருவேளை ரஜினிகாந்த் மாதிரி அஜீத் குமாரும் அதுல ஆர்வமாக இருக்கிறாரா?

- Advertisement -

நடிகர் அஜீத்குமார், தமிழ் சினிமாவில் டாப் ஸ்டார் நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். ரஜினி, கமல், விஜய் வரிசையில் அஜீத்குமார் இருக்கிறார். அதனால் அவரது படங்களை இயக்க இயக்குனர்களும், தயாரிக்க தயாரிப்பாளர்களும் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றனர். ஏனெனில் பிளாப் படங்களில் கூட, இந்த 4 நடிகர்களின் படங்கள் நஷ்டத்தை தருவதில்லை.

நடிகர் விஜயும், நடிகர் அஜீத்குமார் தமிழ் சினிமாவை பொருத்த வரை தொடர்ந்து போட்டியாளர்களாக கருதப்பட்டு வருகின்றனர். எம்ஜிஆர் சிவாஜி, ரஜினி கமல் வரிசையில், விஜய் அஜீத்குமார் பல ஆண்டுகளாக போட்டி நடிகர்களாக தமிழ் சினிமாவில் இருந்து வருகின்றனர். அவர்களது ரசிகர்கள் நேரடியாகவும் மோதிக் கொள்கின்றனர். சமூக வலைதளங்களிலும் கண்டபடி மல்லுக்கட்டி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் விஜய், தனது 69வது படத்துடன் நடிப்புக்கு முழுக்கு போட்டு விட்டு தமிழ் சினிமாவை விட்டே ஒதுங்கி விட முடிவு செய்துவிட்டார். தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கியுள்ள அவர், 2026ம் ஆண்டில் தமிழ்நாட்டில் முதலமைச்சர் என்ற நாற்காலியை பிடித்தே தீருவது என்கிற முனைப்பில் இருந்து வருகிறார்.

விஜய், இப்படி சினிமாவை விட்டு ஒரேடியாக விலகுவதால் அடுத்து அஜீத்குமாருக்கு போட்டி நடிகர்களே இல்லை என்று சொல்லலாம். விஜய் இடத்துக்கு சிவகார்த்திகேயன், சூர்யா, தனுஷ், விஜய் சேதுபதி, சிலம்பரசன் என 5 பேர் போட்டியிட்டாலும், விஜய் இடம் அவருக்கானதாக மட்டுமே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இந்நிலையில் நடிகர் அஜீத்குமார் பின்பற்றும் முக்கிய விஷயம் குறித்த ஒரு தகவல் வெளிவந்துள்ளது. அஜீத்குமார் தனது படத்தின் முதல் நாள் படப்பிடிப்பை, வியாழக்கிழமை அன்றுதான் தொடங்குவார். அதே போல், அவரது படம் ரிலீஸ் ஆவதும் வியாழக்கிழமையாக தான் இருந்து வருகிறது. இப்போது படத்தின் ஷூட்டிங்கை நிறைவு செய்வதும் வியாழக்கிழமையாக மாறி இருக்கிறது.

இப்படி வியாழக்கிழமையை அஜீத்குமார், சென்டிமென்டாக ஏன் வைத்திருக்கிறார் என்பது அவரது நெருங்கிய நண்பர்களுக்கே தெரியவில்லை. ராகவேந்திரர் பக்தர்கள், சாய்பாபா பக்தர்கள்தான் வியாழக்கிழமையை விசேஷமாக பார்ப்பார்கள். குறிப்பாக ரஜினிகாந்த் வியாழக்கிழமைக்கு அதிக முக்கியத்துவம் தரக் காரணம், அவர் ராகவேந்திர சுவாமியின் தீவிர பக்தர். ஒருவேளை ரஜினி போல் அஜீத்குமார் ராகவேந்திர சுவாமியை வழிபடுகிறாரா, என்ற சந்தேகத்தை ரசிகர்களிடையே கிளப்பியுள்ளது.

சற்று முன்