- Advertisement -
தெலுங்கு மொழி பட ஹீரோ ஐகான் ஸ்டார் நடிகர் அல்லு அர்ஜுன் கூறியிருப்பதாவது, ஜெய்லர் 2 படம் தீயாய் இருக்கிறது. ரஜினிகாந்தின் நட்சத்திர அந்தஸ்து ஸ்டைல் கம்பீரமான ஆளுமை ஆகியவற்றை முழுமையாக வெளிப்படுத்தும் மற்றும் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தும் ஒரு கமர்சியல் திரைப்படம் இது. அனிருத் இசையில் கலக்கி இருக்கிறார். நெல்சன் அதிரடியான வெற்றி படத்தை கொடுத்துள்ளார். சட்டை கூட கசங்காமல் 500 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்வது ரஜினி சாரால் மட்டுமே சாத்தியம் என்று நடிகர் அல்லு அர்ஜுன் பாராட்டி கூறியிருக்கிறார்.





