- Advertisement -
Homeபொழுதுபோக்குதிடீரென நடிகர் விஜய்க்கு எதிராக பேசத் துவங்கிய பிரேமலதா விஜயகாந்த்… தவெக கட்சிக்கு பகிரங்க எச்சரிக்கை...

திடீரென நடிகர் விஜய்க்கு எதிராக பேசத் துவங்கிய பிரேமலதா விஜயகாந்த்… தவெக கட்சிக்கு பகிரங்க எச்சரிக்கை – தளபதி ரசிகர்கள் அப்செட்!

- Advertisement -

நடிகர் விஜய் இப்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தின் தலைவராக இருந்து வருகிறார். விஜய் நடிக்க ஆரம்பத்தில் அவர் நாளைய தீர்ப்பு படத்தில் நடித்த பிறகு அவருக்கு பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பு கிடைக்காத நிலையில், நடிகர் விஜயகாந்த் விஜய்க்கு அண்ணனாக செந்தூரப்பாண்டி படத்தில் நடித்துக் கொடுத்தார்.

இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர், விஜயகாந்தின் நெருங்கிய நண்பர். 17 படங்களுக்கு மேல் தன்னை வைத்து படம் இயக்கியவர் என்ற நட்பின் அடிப்படையில் சம்பளம் வாங்காமல் செந்தூரப்பாண்டி படத்தில் கேப்டன் நடித்திருந்தார். ஆனால் விஜய் வளர்ந்த நிலையில், முன்னணி நட்சத்திரமாக மாறிய நிலையில் கேப்டனை அவர் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

- Advertisement -

குறிப்பாக விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியனின் சினிமா வளர்ச்சிக்கு விஜய் எந்த வகையில் உதவவில்லை என்பது உண்மைதான். விஜயகாந்த் விஜய்க்கு உதவியதை போல, சண்முகபாண்டியனுக்கும் விஜய் உதவ வேண்டும். தனது படத்தில் அவரை நடிக்க வைத்திருக்க வேண்டும் என்று பலரும் கூறி வருகின்றனர்.

இந்த சூழலில் சமீபத்தில் மதுரையில் நடந்த தவெக மாநாட்டில் பேசிய நடிகர் விஜய், மதுரை என்றாலே எனக்கு புரட்சிக் கலைஞர் கேப்டன் அண்ணன் விஜயகாந்த் பெயர்தான் நினைவுக்கு வரும். அவருடன் நான் நிறைய பழகி இருக்கிறேன் என்று பேசியிருந்தார். இதுகுறித்து கருத்து தெரிவித்த தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, அவர் எங்க வீட்டுப் பையன். அதனால் கேப்டனை அவர் அண்ணன் என்று சொல்வது எங்களுக்கு பெருமைதான் என்று கூறியிருந்தார்.

- Advertisement -

ஆனால் இப்போது, நாம் தமிழர் கட்சி சீமான், விஜயகாந்த் உடல் நலமின்றி இருந்த போது விஜய், தனது அண்ணனை பார்க்க வந்தாரா? என்று கேள்வி எழுப்பியிருந்தார். இதை சுட்டிக்காட்டி செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், சீமான் சொல்வது 100க்கு 100 உண்மை. கேப்டனின் பெயரையும் புகைப்படத்தையும் அரசியலுக்காக விஜய் பயன்படுத்தினால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

கேப்டன் விஜயகாந்த்தை அரசியல் ரீதியாக தமிழக வெற்றிக் கழகம் அணுகும் பட்சத்தில் அது தவறு என்றும் அவர் எச்சரித்திருக்கிறார். முதலில் தம்பி என்று விஜயை சொன்ன பிரேமலதா, இப்போது அரசியல் ஆதாயத்திற்காக கேப்டன் பெயரை, புகைப்படத்தை விஜய் கட்சி பயன்படுத்தக் கூடாது என எச்சரித்திருப்பது தளபதி ரசிகர்களை அப்செட் செய்துள்ளது. அதே நேரத்தில் முதல் மாநாட்டில் எம்ஜிஆர் அண்ணா விஜயகாந்த் பெயரை உச்சரிக்காத விஜய் மதுரை மாநாட்டில் மட்டும் அவர்களை பற்றி பேசியது ஏன் என்றும் அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

- Advertisement -

சற்று முன்