தமிழ் சினிமாவில் சிலர் திடீரென உச்சநிலைக்கு போய் விடுகின்றனர். அது ஒரு சிலருக்கு மட்டுமே அப்படி ஒரு அதிர்ஷ்டம் கிடைக்கிறது. ஆனால் அந்த அதிர்ஷ்டம் கிடைக்க நிறைய, நிறைய உழைப்பும், தன்னம்பிக்கையும், சகிப்பு தன்மையும் மிக மிக தேவையாக இருக்கிறது. அப்படி வெற்றிப் பெற்ற ஒருவர்தான் இயக்குனர் அட்லி.
தமிழில் ராஜா ராணி தான் அட்லியின் முதல் படம். அதற்கு முன்பு இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக இருந்தார். அவரிடம் பால பாடம் கற்றுக்கொண்ட அட்லி, தான் கற்ற வித்தையை முதல் படமான ராஜா ராணியில் வெளிப்படுத்தி, ரசிகர்களின் மனங்களை கவர்ந்தார்.
தொடர்ந்து விஜய் நடித்த தெறி, மெர்சல், பிகில் ஆகிய 3 படங்களை இயக்கினார். இந்த மூன்று படங்களுமே விஜய்க்கு மாபெரும் வெற்றிப் படங்களாக, இயக்குநர் அட்லிக்கு பெயர் சொல்லும் படங்களாக அமைந்தன. தெறி படத்தில் போலீஸ் அதிகாரியாக, மெர்சல் படத்தில் டாக்டர் கேரக்டரிலும் சிறப்பான கேரக்டர்களை விஜய் கொடுத்து, மாஸ் காட்டி இருந்தார்.
இந்த படங்களின் வெற்றிக்கு பிறகு அட்லி பாலிவுட் பக்கம் சென்றார். பதான் என்ற பிளாக்பஸ்டர் மூவியை கொடுத்த ஷாருக்கான் தனது அடுத்த படமான ஜவான் படத்தை இயக்கும் பொறுப்பை அட்லிக்கு கொடுத்தார். இந்த படம் 23 படங்களில் காப்பி என கிண்டலடிக்கப்பட்டாலும், இதன் வசூல் 1150 கோடி ரூபாயை கடந்து வசூலில் சாதனை புரிந்தது.
தொடர்ந்து பாலிவுட்டில் படங்களை இயக்க தயாராகி வரும் அட்லி, மும்பையில் சொந்தமாக விீடு வாங்கிவிட்டார். இப்போது 40 கோடி ரூபாய் மதிப்பில் புதிய அலுவலகம் ஒன்றை துவங்கியிருக்கிறார். அடுத்து ஷாருக்கான், கமல் இணைந்து நடிக்கும் ஒரு படத்தை அட்லி இயக்கப் போவதாக தகவல் பரவி வந்தது.
இந்நிலையில் தற்போது இயக்குநர் அட்லி அடுத்த படத்துக்கு தயாராகி விட்டார். அதாவது புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜூன் தான் அடுத்த படத்தின் ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். புஷ்பா 2ம் பாகம் படப்பிடிப்பில் இப்போது அல்லு அர்ஜூன் பிஸியாக நடித்துவருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்த பிறகு, அவர் அட்லியின் படத்தில் இணைய இருக்கிறார் என்ற தகவல் வைரலாகி வருகிறது.





