- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழ் சினிமாவுல நல்ல கதைக்கு தான் பஞ்சம், டைட்டிலுக்குமா? இதுல இஞ்சி யாரு? வெல்லம் யாரு?...

தமிழ் சினிமாவுல நல்ல கதைக்கு தான் பஞ்சம், டைட்டிலுக்குமா? இதுல இஞ்சி யாரு? வெல்லம் யாரு? – மணிரத்னம் பட டைட்டில் ஏற்படுத்திய சர்ச்சை!

- Advertisement -

முன்பெல்லாம் ஒரு படத்தின் டைட்டிலே ரசிகர்களுக்கு ஒரு நல்ல கருத்தை சொல்லி விடும். உதாரணமாக தாய் சொல்லை தட்டாதே தாயை காத்த தனையன் மனைவி சொல்லே மந்திரம் கணவனே கண்கண்ட தெய்வம் பாட்டி சொல்லை தட்டாதே காதலிக்க நேரமில்லை என்றெல்லாம் படத்துக்கு தலைப்பு வைத்திருந்தார்கள். அதை ரசிகர்களும் விரும்பி ரசிக்கவே செய்தார்கள்.

அதன்பிறகு ஒரு கட்டத்தில் ஆயிரம் நிலவே வா கடலோர கவிதைகள் அலைகள் ஓய்வதில்லை சுவரில்லாத சித்திரங்கள் தாவணி கனவுகள் புன்னகை மன்னன் தங்கைக்கோர் கீதம் பயணங்கள் முடிவதில்லை மெல்ல திறந்தது கதவு முதல் மரியாதை என்று கவிதையான தலைப்புகளை படங்களுக்கு டைட்டிலாக வைத்தார்கள்.

- Advertisement -

அதற்கு பிறகு ஹீரோயிசம் நிறைந்த படங்களுக்கு தமிழ் சினிமா மாறியதால் பாட்ஷா அண்ணாமலை முத்து இந்தியன் ஆளவந்தான் பாபா பத்ரி ஆறு எனவும் படங்களுக்கு தலைப்பு வைத்தார்கள். அதே நேரத்தில் பூவே உனக்காக காதலுக்கு மரியாதை பிரியமான தோழி எனவும் படங்களுக்கு டைட்டில் வைத்தனர். அந்த படங்களும் ஜெயித்தன.

ஆனால் சமீபகாலமாக திரைப்படங்களுக்கு டைட்டில் வைப்பதே பெரும் போராட்டமாக மாறிவிட்டது. பெரும்பாலும் நட்சத்திர ஹீரோக்களுக்கு படத்தில் அவர்களது கேரக்டர் பெயரையே டைட்டிலாக வைத்து விடுகின்றனர். உதாரணமாக கூலி லியோ மாஸ்டர் டாக்டர் சேயோன் தாய்கிழவி தர்மன் என டைட்டில் வைக்கின்றனர். இல்லை என்றால் பழைய ஹிட் படங்களின் டைட்டிலை இன்றைய புதுப்படங்களுக்கு வைத்து விடுகின்றனர்.

- Advertisement -

தமிழ் சினிமாவில் நல்ல கதைகளுக்கு தான் பஞ்சம் என்றால் நல்ல டைட்டில்களுக்கும் பஞ்சமே நீடிக்கிறது. இப்போது மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி சாய்பல்லவி நடித்து வரும் ஒரு புதிய படத்துக்கு இஞ்சி வெல்லம் என டைட்டில் வைத்துள்ளனர். இதில் இஞ்சி யார் வெல்லம் யார் என்று ரசிகர்கள் இப்போதே கலாய்க்க துவங்கி விட்டனர்.

ஏற்கனவே கடுகு மிளகா இஞ்சி இடுப்பழகி என்ற டைட்டில்களில் தமிழ் படங்கள் வெளிவந்துள்ளது. இப்போது இஞ்சி வெல்லம் என டைட்டில் மணிரத்னம் வைத்துள்ளார். அடுத்து கொத்தமல்லி சீரகம் மல்லிப்பொடி பல்பொடி என்றுகூட டைட்டில்கள் வர வாய்ப்புள்ளது என்று ரசிகர்கள் கலாய்க்கின்றனர். ஒரு அழகான தமிழ் சொல்லில் கவிதையான ஒரு தலைப்பை யோசிக்க கூட இன்றைய இயக்குனர்கள் மெனக்கெட விரும்பாதது ரசிகர்களை அப்செட் அடைய செய்துள்ளது.

- Advertisement -

சற்று முன்