நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்கத்தில் அடுத்து இட்லிக்கடை படம் வெளிவர இருக்கிறது. அதற்கு முன்பாக தனுஷ் இயக்கத்தில் அவரது அக்கா மகன் பவிஷ் நடித்த நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற படம் வருகிற 21ம் தேதி வெளியாக இருக்கிறது. சமீபத்தில் இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.
நடிகர் தனுஷ் நடித்த குபேரா படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த படத்தை இயக்குனர் சேகர் கம்முலா இயக்கி உள்ளார். ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் தெலுங்கு நடிகர் நாகர்ஜூனா முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். குபேரா படத்தில் தனுஷ் பிச்சைக்காரன் கேரக்டரில் நடித்திருக்கிறார்.
அடுத்து நடிகர் தனுஷ் இந்தி படம் ஒன்றில் நடிக்க உள்ளார். அதே போல் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இளையராஜாவின் பயோபிக் கதை 2 பாகங்களாக படம் உருவாக உள்ளது. இதில் இளையராஜாவாக தனுஷ் நடிக்க உள்ளார். இந்த படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம், மெர்க்குரி நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்க உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது.
இதற்கிடையே லப்பர் பந்து படத்தின் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கிறார். அதே போல் போர்த்தொழில் படத்தின் இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கும் ஒரு புதிய படத்திலும் நடிக்க தனுஷ் கமிட் ஆகியிருக்கிறார். இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிக்க உள்ளார்.
போர்த்தொழில் இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் மிக முக்கியமான ஒரு கேரக்டரில் நடிக்க நடிகர் ஆக்ஷன் கிங் அர்ஜூனை கமிட் செய்ய தயாரிப்பு நிறுவனம் அணுகியிருக்கிறது. இந்த படத்தில் நடிக்க அர்ஜூன் ரூ. 7 கோடிக்கு மேல் சம்பளம் கேட்டதாக தெரிய வந்துள்ளது. இதைக் கேட்டு தயாரிப்பாளர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளார்.
சமீபத்தில் லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பில் அஜீத்குமார் நடிப்பில் வெளியான விடாமுயற்சி படத்தில் வில்லனாக அர்ஜூன் நடித்திருந்தார். அதற்கு முன்பாக விஜய் நடித்த லியோ படத்திலும் அர்ஜூன் வில்லன் கேரக்டரில் நடித்திருந்தார். ஆனால் 2 படங்களிலுமே அவரது நடிப்பு பெரிய அளவில் ரசிகர்களை ஈர்க்கவில்லை. அதே நேரத்தில் விடாமுயற்சி படமும் சரியாக ஓடாமல் பிளாப் ஆகியுள்ளது. இந்த நிலையில் ரூ. 7 கோடிக்கு மேல் நடிகர் அர்ஜூன் சம்பளம் கேட்டது தயாரிப்பாளரை திக்குமுக்காட செய்துவிட்டது.





