ஆக்சன் கிங் நடிகர் அர்ஜூன் ஒரு நேர்காணலில் பேசிய போது கூறியதாவது, நான் எம்ஜிஆர் குறித்து அப்படிப்பட்டவர் இப்படிப்பட்டவர் எம்ஜிஆர் அப்படி செய்தார் இப்படி செய்தார் என்று கதை கதையாக நிறைய கேள்விபட்டு இருக்கிறேன். சினிமாவுக்கு நான் வந்து நிறைய வருஷங்கள் ஆகிவிட்டது. இத்தனை படங்கள் நடித்திருக்கிறேன். ஆனால் எம்ஜிஆருடன் ஒரு படத்தில் ஒரு காட்சியில் நான் நடித்திருந்தால் அது போதும். நன்றாக இருந்திருக்கும்.
நடிகர் ஆனந்தபாபு கல்யாணத்துக்கு எம்ஜிஆர் வந்திருந்தார். அந்த கல்யாண போட்டோவில் அவர் இருப்பார். அந்த போட்டோவில் ஒரு ஓரத்தில் கடைசியில் நானும் நின்றிருப்பேன். அது ஒண்ணுதான். எனக்கு கொஞ்சம் திருப்தி தருகிற விஷயம். நான் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்னாடி ஒரு விஷயம் நடந்திருக்கிறது.
எம்ஜிஆர் நடித்த படம் இதயக்கனி. அந்த படத்தின் ஷூட்டிங்குக்காக எம்ஜிஆர் பெங்களூரு வந்திருக்கிறார். அந்த படத்தில் ஒரு டாக்டர் கேரக்டர். அந்த கேரக்டருக்கு யாரை போடலாம் யாரை போடலாம் என்று ஒரு டிஸ்கசன் நடந்திருக்கிறது. இப்போ இம்மீடியட்டா இங்கே கர்நாடகாவில் இருக்கிற ஆர்ட்டிஸ்ட்டுல ஒருத்தரை நடிக்க வைக்கலாமுன்னு முடிவு பண்ணிட்டாங்க.
அப்புறம் ஒரு ஆர்ட்டிஸ்ட் பேர் அவங்க மைண்டுல வந்திருக்கு. அந்த நடிகர் பெயர் சக்தி பிரசாத். அவர்தான் என்னுடைய அப்பா. அவர் 250 படங்களுக்கு மேல் நடிச்சிருக்கார். இதை எதுக்கு சொல்றேன்னா, எங்க அப்பா அந்த படத்துல நடிச்சுட்டு ஷூட்டிங் முடிச்சிட்டு வந்து வீட்டுல எம்ஜிஆர் பத்தி நிறைய சொல்வார். அவர் சொன்னது அப்படியே என் மைண்டுல வருது.
தினமும் ஷூட்டிங் முடிஞ்சதும் ஈவ்னிங் 6 மணிக்கு மேல எம்ஜிஆர் ஒரு ப்ரீப்கேஸ்ல கட்டு கட்டா பணம் வெச்சிருப்பாராம். 100 ரூபா 50 ரூபா 20 ரூபா 10 ரூபா அப்படி கட்டு கட்டா வெச்சுக்கிட்டு வரிசையா நிக்கறவங்களுக்கு எல்லாம் பணத்தை கொடுப்பாராம். உடம்பு நல்லா தெம்பு இருக்கிறவங்களுக்கு அந்த காலகட்டத்துல நான் சொல்றேன், 10 ரூபா 20 ரூபா வயசானவங்களுக்கு 50 ரூபா 100 ரூபான்னு வள்ளல் மாதிரி வாரி வாரி கொடுப்பாராம்.
பெயர் புகழுக்காக இப்படி பண்றாங்க அப்படீன்னா அது ஒரு வருஷம் ரெண்டு வருஷம் பண்ணுவாங்க. ஆனா இப்படி பண்ண முடியாது. இப்படி ஒரு லெஜண்ட் ஒரு முழுமையான நல்ல மனிதராக யாரும் இருக்க முடியாது. அவர் மாதிரி ஒரு பேமிலி இருக்க முடியாது. ஏன்னா தமிழ்நாடே அவரோட பேமிலி என்று நடிகர் அர்ஜூன் அந்த நேர்காணலில் பேசியிருக்கிறார்.





