- Advertisement -
Homeபொழுதுபோக்குசிவகார்த்திகேயன் நடித்த அந்த படம் 2ம் பாகமாக உருவாகிறதா? போடு வெடிய - அந்த படத்தின்...

சிவகார்த்திகேயன் நடித்த அந்த படம் 2ம் பாகமாக உருவாகிறதா? போடு வெடிய – அந்த படத்தின் இயக்குனரே தந்த சூப்பர் அப்டேட்!

- Advertisement -

இயக்குனர் பொன்ராம் சினிமாவில் பல வெற்றிப் படங்களை தந்தவர். இப்போது இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் நடிகர் சரத்குமார் கேப்டன் விஜயகாந்த் இளைய மகன் சண்முக பாண்டியன் நடித்த கொம்பு சீவி என்ற படம் வருகிற 19ம் தேதி வெளியாக உள்ளது. கொம்பு சீவி படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்றுப் பேசிய கொம்பு சீவி படத்தின் இயக்குனர் பொன்ராம், வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2 படம் குறித்து முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த நேர்காணலின் போது இயக்குனர் பொன்ராம் கூறியதாவது, வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் 2ம் பாகத்துக்கான பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதற்கான கதையும் தயாராக உள்ளது.

- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயனின் இப்போதைய வளர்ச்சியை மனதில் வைத்து இந்த கதையில் மாற்றங்களை செய்து வருகிறேன். அனைத்தும் தயாரானவுடன் சிவகாத்திகேயன் ஒப்புக்கொண்டால் அந்த படத்தின் படப்பிடிப்பை தொடங்குவோம். அடுத்ததாக முழுக்க முழுக்க காமெடியை முன்னிலைப்படுத்தி படம் ஒன்றை டைரக்ட் செய்து வருகிறேன்.

இந்த படம் குறித்த அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என்று பொன்ராம் கூறி இருக்கிறார். இயக்குனர் பொன்ராம் – நடிகர் சிவகார்த்திகேயன் கூட்டணியில் இணைந்து ரஜினி முருகன், வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் சீமராஜா ஆகிய 3 படங்கள் வெளிவந்துள்ளன. இதில் ரஜினி முருகன் மற்றும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஆகிய 2 படங்களுமே மிகப்பெரிய வரவேற்பையும் வெற்றியும் பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

குறிப்பாக இந்த 2 படங்களிலுமே நடிகர் சூரியின் நடிப்பு பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது. அதேபோல் சீமராஜா படத்தில் ஒரு காட்சியில் சிக்ஸ்பேக் வைத்து நடிகர் சூரி நடித்ததுதான், விடுதலை படத்தில் அவர் கதாநாயகன் நடிக்க காரணமாக இருந்தது. இப்போது தொடர்ந்து சூரியும் நாயகனாக வளர்ந்து வருகிறார் என்பதும் கவனிக்கத்தக்கது.

ஆனால் இப்போது நடிகர் சிவகார்த்திகேயன் சில படங்களில் கமிட் ஆகி பிஸியாக நடித்து வருகிறார். சூரியும் பிஸியான நடிகராக மாறிவிட்டார். வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2ம் பாகத்தில் அவர்கள் 2 பேரும் சேர்ந்து நடித்தால்தான் அந்த படத்துக்கு பெரிய வரவேற்பும் கிடைக்கும். இந்த சூழலில் அவர்கள் இருவரும் சேர்ந்து நடிப்பதே பெரிய சவாலாக தான் இருக்கும். எனினும் இந்த படம் உருவானால் ரசிகர்களுக்கு அது நல்ல விருந்தாகவும் அமையும்.

- Advertisement -

சற்று முன்