- Advertisement -
நடிகர் அருண்பாண்டியன் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசுகையில், சென்னையை விட்டுட்டு எப்போடா ஓடிப்போலாம்ன்னு இருக்கு. வெறும் செங்கல் சிமென்ட் அப்புறம் குறைவான உணர்ச்சிகள் நிறைந்திருக்கிற இடத்துல மக்கள் பரபரப்பாக போயிட்டே இருக்காங்க. என்னோட கிராமத்துல காலையில அஞ்சு மணிக்கு எழுந்து தோட்ட வேலை செய்வேன். மாடு இருக்கு அதை பராமரிப்பேன். எனக்கு அந்த வாழ்க்கை தான் பிடிச்சிருக்கு. ஆனா என்ன பண்றது? தொழில் இங்கே தான் இருக்குது என்று நடிகர் அருண்பாண்டியன் ஆதங்கமாக கூறியிருக்கிறார்.





