- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னது இட்லி கடை திரைப்படத்தின் கதாநாயகன் தனுஷ் இல்லையா... இந்த நடிகர் தானா... வாட் இஸ்...

என்னது இட்லி கடை திரைப்படத்தின் கதாநாயகன் தனுஷ் இல்லையா… இந்த நடிகர் தானா… வாட் இஸ் திஸ் ப்ரோ…

- Advertisement -

கோலிவுட்டில் தற்போது பிசியாக இருக்கும் நடிகர்களில் முக்கியமானவர் தனுஷ். காலில் சக்கரத்தைக் கட்டி கொண்டு ஓடிக்கொண்டிருக்கும் அவர், இந்தப் பணிச்சுமையுள்ள நேரத்திலும் இயக்கத்தில் கவனம் செலுத்தி வருகிறார். அவரது இயக்குனர் பயணம், பவர் பாண்டி திரைப்படம் மூலம் ஆரம்பமானது.

 

நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஐம்பதாவது திரைப்படமான ராயனை இயக்கி தனது இயக்குனர் பசியை போக்கிக் கொண்டார் தனுஷ். ஆனால் இந்த திரைப்படம் விமர்சன ரீதியாக பெரிய அளவு வரவேற்பை பெறவில்லை. சமூக வலைதளத்திலும் கேலி கிண்டலுக்கு ஆளானது. அதேசமயம் வசூல் மட்டும் 160 கோடி ரூபாய் ஈட்டியது.

 

இந்த உற்சாகத்தில் இருக்கும் தனுஷ் தற்போது மீண்டும் இயக்கத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த முறை தனது திரைப்படத்திற்கு இட்லி கடை என பெயர் வைத்திருக்கிறார். தேனி மற்றும் பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. அடுத்ததாக இதன் சூட்டிங்கை சென்னையில் நடத்த திட்டமிட்டு இருக்கிறார் தனுஷ்.

 

பிறகு துபாய்க்கும் பயணிக்க அவர்கள் முடிவு செய்து இருக்கிறார்களாம். நித்யா மேனன் இதில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இட்லி கடை திரைப்படத்தில் தனுஷ் நடித்து வரும் சூழலில் அவர்தான் கதாநாயகன் என்று அனைவரும் கருதினார்கள். தற்போது அதில் தான் ஒரு ட்விஸ்ட் அரங்கேறி இருக்கிறது.

 

அதாவது முன்னணி நடிகர் அருண் விஜய் தான் இந்த திரைப்படத்தின் நாயகனாக நடித்து வருகிறாராம். தனுஷிற்கு வெறும் கேமியோ ரோல் தான் என்று கூறுகிறார்கள். அது மட்டுமல்ல இதில் பிரகாஷ்ராஜ் இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது. அடுத்த ஆண்டு மே மாதத்தில் இந்த திரைப்படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்று முடிவு செய்து இருக்கிறாராம் தனுஷ்.

 

இது ஒரு பக்கம் இருக்க அவர் இயக்கத்தில் ஏற்கனவே உருவாகி இருக்கும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படத்தின் மீதும் பலரது பார்வை சென்று இருக்கிறது. தனுஷின் அக்காள் மகன் மற்றும் பலர் நடித்திருக்கும் இந்த திரைப்படம் இளைஞர்களின் காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே இந்த திரைப்படத்திலிருந்து கோல்டன் ஸ்பேரோ பாடல் பெரிய அளவில் ரீச் ஆனது. இதனை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ரிலீஸ் செய்ய தனுஷ் திட்டமிட்டுள்ளார்.

சற்று முன்