தமிழ் சினிமாவில் கடந்த 1980 90களில் முன்னணி நாயகிகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை பானுப்பிரியா. அழகன் காவியத் தலைவன் ஆராரோ ஆரிராரோ பங்காளி மகுடம் மகராசன் பொறந்த வீடா புகுந்த வீடா கோபுர வாசலிலே கோகுலம் சுந்தரகாண்டம் உள்ளிட்ட பல படங்களில் பானுப்பிரியா நடித்திருக்கிறார்.
எந்த மாதிரியான கேரக்டர் என்றாலும் அதில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தும் நடிகைளில் மிக முக்கியமானவர் நடிகை பானுப்பிரியா. சில படங்களில் அவர் காமெடியாக நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் சமீபகாலமாக அவர் படங்களில் நடிப்பது இல்லை. அவருக்கு நினைவுத்திறன் பாதிப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாவர் நடிகர் பிருத்விராஜ். இவருக்கு பப்லு என்ற பெயரும் உள்ளது. பாண்டி நாட்டு தங்கம் படத்தில் வில்லனாக அவர் அறிமுகமானார். தொடர்ந்து அவள் வருவாளா வானமே எல்லை தாய் மனசு டைம் புதிய மன்னர்கள் பயணம் அழகன் ஏஸ் என பல படங்களில் பப்லு நடித்திருக்கிறார்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் பப்லு கூறியதாவது, நான் முதன் முதலில் சைட் அடித்த பெண் நடிகை பானுப்பிரியா தான். இயக்குனர் கே பாலச்சந்தர் இயக்கத்தில் வானமே எல்லை என்ற படத்தில் நாங்கள் நடித்துக் கொண்டிருந்தோம். இந்த படத்துக்காக நாடோடி மன்னர்களே வணக்கம் வணக்கம் என்ற பாடல் காட்சி படமாக்கப்பட்டது.
அந்த பாடலில் நடிகை பானுப்பிரியா நடனமாடி இருப்பார். இதில் ஒரு மூவ்மெண்ட் வரும். தலை வேற ஜெஸ்ட் வேற இடுப்பு வேற கால் வேற என தனித்தனியாக தஞ்சாவூர் பொம்மை மாதிரி பானுப்பிரியா அப்படி ஆடும். ஷூட்டிங் ஸ்பாட்டில் இதை ஆர்வமாக நான் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது என் பின்னால் யாரோ கை வைத்தார்கள்.
அப்போது நான், பார்ரா மச்சான் எல்லாம் தனித்தனியா எப்படி ஆடுதுன்னு என்று கமெண்ட் அடித்து சொல்லிவிட்டேன். பின்னால் திரும்பிப் பார்த்தால் கே பாலச்சந்தர் நிற்கிறார். திடீரென கன்னத்தில் பளார் என்று ஓங்கி ஒரு அறை விட்டார். என்னடா பண்றே? போய் வேலையை பாருன்னு திட்டினார் என்று நடிகர் பப்லு அந்த நேர்காணலில் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.





