- Advertisement -
Homeபொழுதுபோக்குசுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை 4 படம் எப்படி இருக்கு? - பத்திரிகையாளர்...

சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை 4 படம் எப்படி இருக்கு? – பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க…!

- Advertisement -

டைரக்டர் சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் அரண்மனை 4. இந்த படம் ஏற்கனவே வெளிவந்த அரண்மனை, அரண்மனை 2, 3 படங்களை தொடர்ச்சியாக அரண்மனை 4 என வெளிவந்திருக்கிறது. நேற்று அரண்மனை 4 படம் வெளியான நிலையில், இந்த படத்தில் சுந்தர் சி கதாநாயகனாக நடித்திருக்கிறார். நடிகைகள் தமன்னா, ராஷிகண்ணா, யோகி பாபு, கோவை சரளா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர்.

இந்த படம் கடந்த வெள்ளிக்கிழமையன்று வெளியானது. ஒரு சிலர் இந்த படத்தை பாராட்டி வருகின்றனர். அதேபோல் எதிர்மறையான விமர்சனங்களும் இருந்துதான் வருகின்றன. இந்த படத்தின் வெற்றியை பொருத்துதான், அரண்மனை 5 வருமா, வராதா என்பது தெரிய வரும். ஆக, அரண்மனை 5ன் தலையெழுத்து, அரண்மனை 4 தான் தீர்மானிக்கும் என்றும் கூறியிருக்கிறார்.

- Advertisement -

அரண்மனை 4 படம் குறித்து பத்திரிகையாளர் மற்றும் நடிகர் பயில்வான் ரங்கநாதன் கூறியதாவது, படத்தின் தலைப்பே சரியாக வைக்க தெரியாதவர்கள்தான் பார்ட் 1 பார்ட் 2 படம் எடுப்பார்கள். அந்த வரிசையில் இது ஒரு படம். பார்ட் 4 ஆக வந்திருக்கிறது.

ஆரம்பத்தில் ஒரு குட்டி கதை சொல்ல, ஒருத்தி பேயாக மாறுகிறார். நீ தங்கச்சியை கொன்னுட்ட இல்ல, நீ என் தங்கச்சியா நடிக்கணும் என்று அவனும் செத்துவிடுவான். ஏன்யா எங்க பொறுமை ஏன் சோதிக்கிறீங்க. கிட்டத்தட்ட 60, 70 படம் இதே மாதிரி பார்த்துவிட்டோம். பார்த்து பார்த்து மனசும், உடம்பும் மரத்துப்போச்சு.

- Advertisement -

தமன்னா தான் எல்லாரையும் பேயாக இருந்து காப்பாற்றுகிறார். ஒரு பேய் பங்களா விற்கிற கதையை எத்தனை படத்தில்தான் சொல்லி எங்களுக்கு மொட்டை அடிப்பீங்க. போதும் சாமி அழுதுடுவேன். யோகி பாபு காமெடிக்கு யாருக்குமே சிரிப்பு வரலை. குழந்தைகள் கூட சிரிக்கவில்லை. அழகா இருக்குற தமன்னா முகத்தில் பேயோட சாயல் கொஞ்சமும் இல்லை.

ராஷிக்கண்ணா, நீங்கள் டாக்டர்தான். பேய் வீட்டில் பேஷண்ட் குழந்தைகளை வச்சிருக்கீங்க. முகத்தில் எந்தவிதமான நடிப்பு, மாடுலேஷன் இல்லாமல் பேசுகிறார் யோகிபாபு. காமெடியும் இல்லாமல், பயமும் இல்லாமல் அந்தரத்தில் தொங்கவிட்டு திருநங்கை போல் படம் எடுத்தால் எப்படி, அரண்மனை மூன்று பார்ட்டில் வந்த சீன்கள் அப்படியே அரண்மனை 4ல் வந்திருக்கிறது. ஏன் வித்தியாசமாக இந்த படத்தை எடுக்கவில்லை என்று கடுமையாக டைரக்டர் சுந்தர் சி யை விமர்சித்து பேசி இருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.

- Advertisement -

சற்று முன்