- Advertisement -
Homeபொழுதுபோக்குதிரிஷியம் 3 படப்பிடிப்பை தடுத்து நிறுத்திய இயக்குனர் ஜீத்து ஜோசப்… அட இது அவரோட படம்தானே?...

திரிஷியம் 3 படப்பிடிப்பை தடுத்து நிறுத்திய இயக்குனர் ஜீத்து ஜோசப்… அட இது அவரோட படம்தானே? குழப்பத்தில் தவித்த ரசிகர்கள்!

- Advertisement -

மலையாளத்தில் மோகன்லால் மீனா நடிப்பில் வெளியான படம் திரிஷியம். மலையாள இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவான இந்த படம் கேரளா ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை வெற்றியை பெற்றது. தொடர்ந்து மோகன்லால், மீனா நடிப்பில் திரிஷியம் 2ம் பாகம் வெளியாகி அந்த படமும் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தையும் ஜீத்து ஜோசப்தான் இயக்கி இருந்தார்.

இதைத் தொடர்ந்து தமிழிலும் ரீமேக் செய்து இயக்குனர் ஜீத்து ஜோசப் திரிஷியம் படத்தை டைரக்ட் செய்தார். தமிழில் இந்த படத்துக்கு பாபநாசம் என டைட்டில் வைக்கப்பட்டது. இந்த படத்தில் மோகன்லால் கேரக்டரில் நடிகர் கமல்ஹாசனும் மீனா கேரக்டரில் நடிகை கௌதமியும் நடித்திருந்தனர். மேலும் கமலின் மகள்களாக நிவேதா தாமஸ் எஸ்தர் ஆகியோரும் நடித்திருந்தனர்.

- Advertisement -

மேலும் இந்த படத்தில் போலீஸ் ஐஜியாக ஆஷா சரத் எஸ்ஐ கேரக்டரில் அருள்தாஸ் போலீஸாக கலாபவன் மணி மற்றும் டெல்லி கணேஷ் சார்லி வையாபுரி எம்எஸ் பாஸ்கர் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். கமலின் மகளை பாலியல் துன்புறுத்தல் செய்ய இரவில் வரும் ஐஜியின் மகன், தவறுதலான தாக்குதலில் இறந்து விடுகிறான்.

அந்த உடலை மறைத்து வைக்கும் கமல்ஹாசன், கடைசியில் போலீஸ் விசாரணையில் குடும்பத்துடன் சிக்கி கொள்கிறார். கொலை நடந்த போது அங்கு தனது குடும்பமே இல்லை என்று சினிமா பாணியில் பொய் சாட்சிகளை உருவாக்கும் நடிகர் கமல்ஹாசன், கடைசியில் ஒரு விஷயத்தில் வசமாக சிக்கிக் கொள்கிறார். கடைசியில் அவர் அதில் இருந்து மீண்டாரா என்பதுதான் பாபநாசம் தமிழ் வெர்ஷன், திரிஷியம் மலையாள படத்தில் கதையாக உள்ளது.

- Advertisement -

இந்நிலையில் திரிஷியம் 3 படம் விரைவில் உருவாக உள்ளது. மலையாளத்தில் மீண்டும் மோகன்லால் மீனா நடிப்பில் இந்த படம் தயாராக உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை இயக்குனர் ஜீத்து ஜோசப் செய்து வருகிறார். இந்த சூழலில் இந்தியிலும் திரிஷியம் திரிஷியம் 2 படங்கள் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற நிலையில் திரிஷியம் 3 படத்துக்கான படப்பிடிப்பை துவங்கியுள்ளனர்.

இதில் மோகன்லால் கேரக்டரில் அஜய் தேவ்கனும் மீனா கேரக்டரில் ஸ்ரேயா சரணும் நடிக்கின்றனர். ஏற்கனவே அவர்கள் நடித்த 2 பாகங்களும் இந்தியில் பலத்த வரவேற்பை பெற்ற நிலையில், திரிஷியம் 3 படத்தை துவங்கி இருக்கின்றனர். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இந்தியில் திரிஷியம் 3 படப்பிடிப்பை நிறுத்திய மலையாள இயக்குனர் ஜீத்து ஜோசப், திரிஷியம் படம் மலையாளத்தில்தான் உருவானது. இங்குதான் முதலில் துவங்கப்பட்டது. மலையாளத்தில்தான் முதலில் படம் முடிய வேண்டும். அதற்கு முன்பு இந்தியில் படப்பிடிப்பை துவங்கினால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என எச்சரித்த நிலையில், இந்தியில் திரிஷியம் 3 படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

- Advertisement -

சற்று முன்