- Advertisement -
Homeபொழுதுபோக்குகேம் சேஞ்சர் படத்துக்காக நடிகர் எஸ்ஜே சூர்யா செய்த தரமான சம்பவம், பில்டப் ஹீரோக்களுக்கு மத்தியில்...

கேம் சேஞ்சர் படத்துக்காக நடிகர் எஸ்ஜே சூர்யா செய்த தரமான சம்பவம், பில்டப் ஹீரோக்களுக்கு மத்தியில் இப்படியும் ஒரு நடிப்பு அரக்கன்? ஆச்சரியப்பட்ட ரசிகர்கள்!

- Advertisement -

சமீபத்தில் ஒரு சின்ன பட்ஜெட் படம் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் மொத்த வசூலை 14 லட்சம் ரூபாய்தானாம். இந்த படத்தை தயாரித்த தயாரிப்பாளருக்கு பலத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனினும் அந்த படத்தை இயக்கிய இயக்குனர் தனது சம்பளம் ரூ. 12 லட்சம் தந்தாக வேண்டும் என்று யூனியனில் புகார் செய்த சம்பவம் நடந்திருக்கிறது.

இப்படிதான் யார் எப்படி நஷ்டப்பட்டால் என்ன, என்னுடைய சம்பளம் எனக்கு முக்கியம் என்று நினைக்கும் நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள்தான் பெரும்பாலும் தமிழ் சினிமாவில் இருக்கின்றனர். கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகர்கள், படம் ஊத்திக்கொண்டால் தயாரிப்பாளர் நஷ்டத்தில் தவிக்கும்போது, தங்களது சம்பளத்தில் 10 சதவீதம் கூட திருப்பித் தருவதில்லை.

- Advertisement -

ஆனால் சில நடிகர்கள் தயாரிப்பாளர்கள் பலத்த நஷ்டமடைந்தால் சம்பளத்தை குறைத்துக்கொண்டு இருக்கிறார்கள். இப்போது இந்தியன் 2 படம் தயாரித்த வகையில் பலத்த நஷ்டம் ஏற்பட்ட நிலையில், இந்தியன் 3 படத்துக்கு சம்பளத்தை விட்டுத் தருமாறு லைகா நிறுவனம் இயக்குனர் ஷங்கரிடம் கேட்டிருக்கிறது. ஆனால் அவர் தனது சம்பளம் ரூ. 30 கோடி வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் மட்டுமல்ல இந்திய சினிமாவிலேயே பல முன்னணி நட்சத்திர நடிகர்கள் பலரும் பில்டப் நடிகர்களாக தான் இருக்கின்றனர். அதில் ரஜினிகாந்த் விஜய் சூர்யா ஷாருக்கான் அல்லு அர்ஜூன் பாலகிருஷ்ணா என பலரை சொல்ல முடியும். இவர்களால் வித்யாசமான கேரக்டர்களில் நடிக்க முடியாது. ஆனால் 1000 பேரை ஒரே நேரத்தில் அடித்து பறக்க விடுவார்கள்.

- Advertisement -

இதுபோன்ற நடிகர்களுக்கு மத்தியில் எஸ்ஜே சூர்யா போன்ற நல்ல நடிகர்களும் இருக்கவே செய்கின்றனர். கமல், விக்ரம் போல எஸ்ஜே சூர்யாவும் சினிமாவுக்காக தான் நடிக்கும் கேரக்டருக்காக அதிகமாக மெனக்கெடுகிறார். இப்போது கேம் சேஞ்சர் படத்துக்காக ஒரு விஷயத்தை அவர் தரமாக செய்திருக்கிறார்.

கேப்டன் விஜயகாந்த், தனக்கு தமிழ் மொழி மட்டுமே தெரியும் என்பதால் தமிழை தவிர பிறமொழி படங்களில் நடிக்கவில்லை. ஆனால் எஸ்ஜே சூர்யா வில்லனாக நடித்துள்ள கேம் சேஞ்சர் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி என 5 மொழிகளில் வெளியாகிறது. இதற்காக தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி என அந்த மொழிகளை கற்றுக்கொண்டு டப்பிங் பேசியிருக்கிறார் நடிப்பு அரக்கன் எஸ்ஜே சூர்யா. இவரது டெடிகேஷனை பார்த்து ரசிகர்கள் அசந்து போயுள்ளனர்.

- Advertisement -

சற்று முன்