விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 7 இப்போது ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த 35 நாட்களாக நடந்துவரும் இந்த சீசனை வழக்கம்போல் நடிகர் கமல்ஹாசன்தான் தொகுத்து வழங்கி வருகிறார். வாரந்தோறும், பார்வையாளர்களின் ஓட்டு எண்ணிக்கை அடிப்படையில் குறைந்த ஓட்டுகளை பெறும் போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்படுகின்றனர்.
அந்த வகையில் நேற்று, பட்டிமன்ற பேச்சாளர் அன்னபாரதி நேற்று வெளியேற்றப்பட்டார். கடந்த வாரம்தான் அவர் ஒயில் கார்டு முறையில் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தார். வந்த ஒரே வாரத்தில் அவர் வெளியேறியது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இதைவிட நேற்று முன்தினம், சனிக்கிழமை நிகழ்ச்சியில் இவரால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற குற்றச்சாட்டு அடிப்படையில் பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்த பிரதீப் ஆண்டனி, ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார். இது, பார்வையாளர்களை பலத்த அதிர்ச்சியடைய வைத்தது.
இதுகுறித்து நேர்காணல் ஒன்றில், நடிகர் மற்றும் பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கடுமையாக விமர்சித்து பேசி இருக்கிறார். அவர் கூறுகையில், பிக்பாஸ் வீட்டுக்குள் பிரதீப் நல்ல முறையில் நேர்மையாக விளையாடிக் கொண்டு இருந்தார். பார்வையாளர்களின் கணிசமான ஆதரவும் அவருக்கு இருந்தது. அவரை இப்படி திடீரென வெளியேற்றியதை பலரும் கடுமையாக விமர்சிக்கின்றனர்.
பிக்பாஸ் வீட்டில், கமல்ஹாசன் சொந்த முடிவுகளை எடுப்பதில்லை. முன்பு போல் கண்டிப்பது, தண்டிப்பது எல்லாம் அவரது கையில் இல்லை. அதை பிக்பாஸ்தான் முடிவு செய்கிறார். வனிதா விஜயகுமார் மகள் என்பதால், ஜோவிதா பேசுவதற்கு மட்டும் அந்த வீட்டுக்குள் அனுமதிக்கப்படுகிறது.
பிக்பாஸ் வீட்டில் பெண்களை காதலியுங்கள், நூல் விடுங்கள். அப்போதுதான் இந்த நிகழ்ச்சியோட ரேட்டிங் ஏறும் என பிக்பாஸ் சொன்னதற்கு பிரதீப் ஒத்துக்கொள்ளவில்லை. அதெல்லாம் என் கேரக்டருக்கு சரிப்பட்டு வராது, அதற்கு நான் இல்லை என மறுத்துவிட்டதால், பிக்பாஸ் உத்தரைவ மதிக்காத பிரதீப்பை கட்டாயமாக வெளியேற்றி விட்டனர். கமல்ஹாசனும் அதனை வேடிக்கை பார்த்திருக்கிறார், என்று கூறி இருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.





