- Advertisement -
Homeபொழுதுபோக்குதனது அக்கா மகன் பவிஷூக்கு நடிகர் தனுஷ் செய்த அட்வைஸ் - 30 நாட்களில் இப்படி...

தனது அக்கா மகன் பவிஷூக்கு நடிகர் தனுஷ் செய்த அட்வைஸ் – 30 நாட்களில் இப்படி ஒரு விஷயம் நடந்திருக்குதா? – ஆச்சரியத்தில் உறைந்த ரசிகர்கள்!

- Advertisement -

நடிகர் தனுஷ் இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார். பாடகர் தயாரிப்பாளர் மட்டுமின்றி இப்போது நடிகர் தனுஷ் இயக்குனராகவும் இருக்கிறார். ப பாண்டி ராயன் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என தனுஷ் இயக்கத்தில் இதுவரை 3 படங்கள் வெளியாகி இருக்கின்றன. அடுத்ததாக அவர் இயக்கிய இட்லிகடை படம் வருகிற அக்டோபர் 1ம் தேதி ரிலீஸாக உள்ளது.

நடிகர் தனுஷ் இயக்கிய படங்களில் ராஜ்கிரண் ரேவதி பிரதான கேரக்டர்களில் நடித்த ப பாண்டி படம் ஓரளவுக்கு ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இதில் தனுஷ் மடோனா செபாஸ்டியன் இளம் வயது ராஜ்கிரண் ரேவதியாக நடித்திருந்தனர். அதன்பிறகு ராயன் படம் பிளாக்பஸ்டர் மூவியாக இயக்குனர் தனுஷூக்கு அமைந்தது.

- Advertisement -

நடிகர் தனுஷை காதல் கொண்டேன் படம் மூலம் நடிகராக உருவாக்கியது அவரது அண்ணன் இயக்குனர் செல்வராகவன்தான். அந்த படத்தை தொடர்ந்து செல்வராகவன் இயக்கிய புதுப்பேட்டை படமும் தனுஷூக்கு பெரிய வரவேற்பை பெற்றுத் தந்தது. தனது அண்ணன் தன்னை சினிமாவில் கொண்டு வந்தது போல் ஒரு முயற்சியை தனது சகோதரி மகன் பவிஷூக்காக தனுஷ் எடுத்து வருகிறார்.

நடிகர் தனுஷ் இயக்கிய 3வது படம் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம். நீக் என சுருக்கமாக அழைக்கப்பட்ட இந்த படம் கடந்த பிப்ரவரி மாதம் 21ம் தேதி வெளியானது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு படம் வரவேற்பை பெறவில்லை. தனக்கு ஒரு காதல் கொண்டேன் படம் போல, தனது அக்கா மகன் பவிஷூக்கு இந்த படம் அமையும் என தனுஷ் எதிர்பார்த்தார். அது நடக்கவில்லை.

- Advertisement -

இதையடுத்து அடுத்த படத்தில் நடிக்க பவிஷ் தயாராகி விட்டார். ஆரம்பத்தில் பவிஷூக்காக கதை கேட்ட நடிகர் தனுஷ் இப்போது பனாரஸ்சில் நடந்து வரும் ஒரு இந்தி படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். மேலும் குபேரா படத்திலும் அவர் சில காட்சிகளில் நடிக்க வேண்டியுள்ளது. இட்லி கடை படத்திலும் ஒரு பாடல் காட்சியில் நடிக்க வேண்டிய சூழலில், பவிஷூக்காக தனுஷ் கதை கேட்க நேரம் ஒதுக்க முடியவில்லை.

இதுகுறித்து தனது அக்கா மகன் பவிஷிடம் பேசிய நடிகர் தனுஷ், நீ எல்லாவிதமான கதைகளையும் கேட்டுக்கொள். எந்த இடையூறும் இல்லாமல் உனக்கு ஒரு கதை நல்ல முறையில் செட் ஆகும். இந்த படத்தில் நடித்தால் அது பெரிய வரவேற்பை பெற்றுத் தரும் என்று உனக்கு தோன்றினால் அந்த கதையை ஓகே சொல்லிவிடு என்று அட்வைஸ் செய்திருக்கிறார். இதையடுத்து கடந்த 30 நாட்களில் நடிகர் பவிஷ் 20 கதைகளுக்கு மேல் கேட்டுவிட்டதாக தெரிய வந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்