நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 11 ஆண்டுகளாக வெளியான 10 படங்களும் படுதோல்வி அடைந்தன. இதில் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியான ஜெய்பீம் சூரரைப் போற்று ஆகிய 2 படங்கள் மட்டுமே வணிக ரீதியான வெற்றியை பெற்றன. மற்ற படங்கள் எதுவுமே தியேட்டருக்கு வந்த சுவடு தெரியாமல் மாயமாகி விட்டன.
சிங்கம் 3 பசங்க 2 தானா சேர்ந்த கூட்டம் மாசு என்கிற மாசிலாமணி அஞ்சான் 24 காப்பான் எதற்கும் துணிந்தவன் கங்குவா உள்ளிட்ட 10 படங்களும் சூர்யாவுக்கு பலத்த ஏமாற்றத்தை தந்தன. பலத்த பிளாப் ஆன இந்த படங்களில் சூர்யா நடிப்பு அழுத்தமாக இருந்த போதிலும் கதை திரைக்கதை வலுவாக அமையவில்லை என்று ரசிகர்கள் அதிருப்தியடைந்தனர்.
அதிலும் குறிப்பாக கடந்தாண்டில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான கங்குவா படம் சரித்திர கால கதையாக இருந்தது. இதில் மிகவும் கஷ்டப்பட்டு பல காட்சிகளில் சூர்யா நடித்திருந்தார். நடிப்பை பொறுத்த வரை நடிகர் சூர்யா தன்னால் இயன்ற அளவுக்கு முழுமையாக திறமையை வெளிப்படுத்தி நடித்து இருந்தார். ஆனால் கதை திரைக்கதை படத்தை பிளாப் ஆக்கி விட்டது.
இந்த சூழலில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜா இயக்கத்தில் சூர்யா நடித்த 44வது படம் ரெட்ரோ படம் வருகிற மே 1ம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தில் பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், ரெட்ரோ படம் சூர்யாவுக்கு நிச்சயமாக வெற்றியை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா தனது 45வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் மற்றும் நடிகர் ஆர்ஜே பாலாஜி டைரக்ட் செய்து வருகிறார். திரிஷா யோகிபாபு நட்டி ஆர்ஜே பாலாஜி சுவாசிகா ஷிவதா உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். எதற்கும் துணிந்தவன் ஜெய்பீம் படங்களை தொடர்ந்து இந்த படத்திலும் சூர்யா வக்கீலாக நடித்துள்ளார்.
இந்த படங்களை தொடர்ந்து நடிகர் சூர்யா நடிக்கும் 46வது படம் குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தை வாத்தி லக்கி பாஸ்கர் படங்களை இயக்கிய இயக்குனர் வெங்கி அட்லூரி டைரக்ட் செய்ய இருக்கிறார். இதில் கடந்த தீபாவளிக்கு வெளியான லக்கி பாஸ்கர் 107 கோடி ரூபாய் வசூலித்த சூப்பர் ஹிட் படமாகும். இந்தியாவின் முதல் என்ஜின் உருவானதை மையப்படுத்திய இந்த படத்துக்கு 760சிசி என டைட்டில் வைக்கப்பட உள்ளது. நிச்சயமாக இந்த படம் சூர்யாவுக்கு பெரிய அளவில் பேசப்படும் ஒரு படமாக இருக்கும் என்று அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.





