- Advertisement -
Homeபொழுதுபோக்குபிக்பாஸ் நிகழ்ச்சியை கலாய்த்த நடிகர் கூல் சுரேஷ், ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு, ஆனா ஆடியன்ஸ்...

பிக்பாஸ் நிகழ்ச்சியை கலாய்த்த நடிகர் கூல் சுரேஷ், ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு, ஆனா ஆடியன்ஸ் பழசு… அங்க நடக்கிறது எல்லாமே நாடகம்தான் – குக் வித் கோமாளியையும் விளாசித் தள்ளிட்டாரே?

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல படங்களில் காமெடி கேரக்டர்களில் நடித்து வருபவர் கூல் சுரேஷ். குறிப்பாக நடிகர் சிம்பு படங்களில் இவர் நடித்திருக்கிறார். அதே போல் நடிகர் விவேக் நடித்த பல காமெடி காட்சிகளில் கூல் சுரேஷ் இணைந்து நடித்திருக்கிறார். கடந்த முறை பிக்பாஸ் போட்டியில் கூல் சுரேஷூம் ஒரு போட்டியாளராக பங்கேற்று இருந்தார்.

கூல் சுரேஷ் அவ்வப்போது ஏதேனும் கலாட்டா செய்து, சமூக வலைதளங்களில் டிரண்டிங் ஆகி வருகிறார். சமீபத்தில் இந்தியன் 2 படத்துக்கு, குதிரை மீது ஏறி, இந்தியன் தாத்தா கெட்டப்பில் தேசியக் கொடியுடன் வந்து, பரபரப்பை ஏற்படுத்தினார். அதே போல் தி கோட் விஜய் படம் ரீீலீஸ் நாளன்று, ஆட்டுக்குட்டியுடன் தியேட்டருக்கு வந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்

- Advertisement -

சில மாதங்களுக்கு முன், நடிகர் மன்சூர் அலிகான் தயாரித்த சரக்கு படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இந்த விழாவில் மேடையில் பேசிய கூல் சுரேஷ், திடீரென தன் கழுத்தில் இருந்த மாலையை எடுத்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி பேசிக்கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் போட்டுவிட, அது பெரிய அளவில் சர்ச்சையானது. பிறகு விளையாட்டுத்தனமாக செய்துவிட்டேன் என பகிரங்கமாக மன்னிப்பும் கேட்டார்.

இந்த சூழலில் தற்போது பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி, கடந்த ஞாயிறு அன்று துவங்கியது. இந்த முறை கமலுக்கு பதிலாக விஜய் சேதுபதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இதுகுறித்து நடிகர் மற்றும் பிக்பாஸ் முன்னாள் போட்டியாளர் கூல் சுரேஷ் பேசியதாவது, விஜய் சேதுபதியை யாரும் குறை சொல்லாதீர்கள். அங்கே நடப்பது எல்லாமே ஒரு நாடகம்.

- Advertisement -

அங்கே உள்ளுக்குள் என்ன நடக்கிறது என்று எனக்கு தெரியும். வெளியே நடக்கறதும் எனக்குத் தெரியும். ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்கிறார்களே, ஆனால் ஆடியன்ஸ் பழசு. நீங்கள் வேணுமானால் பாருங்கள். இந்த பிக்பாஸ் சீசன் 8, எட்டு என்றாலே ஒரு ராசியில்லாத நம்பர். இது எல்லோருக்குமே தெரியும். அதனால் இந்த நிகழ்ச்சி ஆட்டமெல்லாம் என்ன ஆகப் போகுது என்று தெரியவில்லை. மறுபடியும் சொல்றேன், ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு. ஆடியன்ஸ் பழசு.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியை நான் வன்மையாக கண்டிக்கிறேன். குக் வித் அவங்க, கோமாளி அதை பார்க்கிற நாம்தான். விவசாயம் தெய்வம். சாப்பாடு என்பது அன்னலட்சுமி. அதை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் எதை எதையோ போட்டு சமைத்து, அதற்கு ஒரு பெயர் வைத்து போட்டி நடத்துவதை அது ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக இருந்தாலும் ஏற்க முடியவில்லை என்று கூல் சுரேஷ் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்