- Advertisement -
இன்று செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் கூல் சுரேஷ் கூறியதாவது, நான் தெரியாமல் தான் கேட்கிறேன். நடிகர் அஜீத்குமார் தேவா சார் மறைவுக்கு வரலே. ஒரு இரங்கல் கூட தெரிவிக்கலேன்னு எல்லாரும் திட்டுறாங்க. கலாய்க்கிறாங்க. இப்போ இதுதான் நாட்டுல ஒரு பிரச்சனையாங்க? இப்போ நான் உங்களை கேட்கிறேன். தேவா சார் மறைவுக்கு நயன்தாரா வரலே. திரிஷா வரலே தமன்னா வரலே. அவங்களை ஏன் நீங்க கேள்வி கேட்கலே? தேவா சார் இறந்த போது அஜீத் வெளிநாட்டில் இருந்திருக்கலாம். இல்லேன்னா அவரோட கார் இன்ஜினுக்கு ஆயில் ஊத்திட்டு இருந்திருக்கலாம். காரை சர்வீஸ் பண்ணிட்டு இருந்திருக்கலாம். அதுதானே சார் முக்கியம்? என்று நடிகர் கூல் சுரேஷ் பேசியிருக்கிறார்.





